Published : 12 Sep 2023 08:12 AM
Last Updated : 12 Sep 2023 08:12 AM

ஜி20 உச்சி மாநாட்டில் முதல்வர் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை: விசிக தலைவர் திருமாவளவன் கருத்து

கோப்புப்படம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சனாதனத்துக்கு எதிராக பல்வேறு பரப்புரை மற்றும் போராட்டங்களை விசிக முன்னெடுத்து வருகிறது. விசிக பற்றவைத்த நெருப்பு, இன்றைக்கு இந்தியா முழுவதும் பரவி எரிந்து கொண்டிருக்கிறது. சனாதனம் என்பது கொடுமையான கருத்தியல் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள தொடங்கிவிட்டனர்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து மதத்தின் மீது அதீதபற்று கொண்டவர். கடவுள் நம்பிக்கை மிக்கவர். அவர் இந்துக்களுக்கு எதிரி என்பதைபோல தோற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயல்கின்றனர். சாதாரண மக்களின் மத நம்பிக்கையை பற்றி யாரும் பேசவில்லை. சனாதனத்தை தங்களின் மூலதனமாக பயன்படுத்தி கொண்டு, அரசியல் ஆதாயம் தேடும் சங்பரிவார்களின் இந்துத்துவா செயல்திட்டத்தைதான் அனைவரும் விமர்சிக்கிறோம்.

2024 மக்களவை பொதுத் தேர்தலில், சங்பரிவார் அமைப்புகளின் ஆட்சியை அப்புறப்படுத்துவதே இண்டியா கூட்டணியின் சவாலாகும். இந்தியாவில், சமீபத்தில் நடைபெற்ற 7 சட்டப்பேரவை தேர்தல்களில் 4 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்தவகையில் இண்டியா கூட்டணிக்கு வரவேற்பும், ஆதரவும் பெருகி வருகிறது. இதனால் பாஜக அச்சம் அடைந்துள்ளது. இண்டியா கூட்டணி மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றிபெரும்.

முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் ஜி20 மாநாட்டில் பங்கேற்றது கூட்டணியின் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. குடியரசு தலைவரின் அழைப்பின்படி முதல்வர்களாக பங்கேற்றனர். இதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x