Published : 28 Aug 2023 06:04 AM
Last Updated : 28 Aug 2023 06:04 AM

சென்னை | செப்.7-ல் ஆர்ப்பாட்டம்: ஏஐடியுசி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளன (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் நாராயணசிங் ஆகியோர் கூறியதாவது:

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு மறுக்கிறது. 94 மாதங்கள் நிறுத்திவைத்துள்ள அகவிலைப்படி உயர்வை ஓய்வூதிய விதிகளின்படி உடனே வழங்க வேண்டும். அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச, அதிகபட்ச ஓய்வூதியம் மாற்றியமைக்க ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஐடியுசி சார்பில் செப்.7-ம் தேதி சென்னை, பல்லவன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x