Published : 24 Jul 2023 04:14 AM
Last Updated : 24 Jul 2023 04:14 AM

திமுக அரசை கண்டித்து 25 ஆயிரம் இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசினார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. உடன், கட்சி நிர்வாகிகள்.

சென்னை: திமுகை அரசைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று 25 ஆயிரம் இடங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மின் கட்டணம், சொத்து வரி, வாகனப் பதிவுக் கட்டணம்,விலைவாசி உயர்வு, அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை வழங்க மறுப்பது, மேகேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கத் தவறியது உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 11,000 வார்டுகள், 15,600 கிராம ஊராட்சி களில் திமுக அரசைக் கண்டித்தும், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்களாகியும், மக்களுக்குஇதுவரை எந்த நன்மையும் செய்யவில்லை.

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறியபிறகும், திமுகவினர் அதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. மகளிர் உரிமைத் தொகைக்கு இப்போதுதான் விண்ணப்பங்கள்விநியோகப்படுகின்றன. திமுகஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியுள்ளதால், பெண்கள் அனைவருக்கும் ரூ.27 ஆயிரம் மகளிர்உரிமைத் தொகை வழங்கவேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமருக்குஎதிராக அரசியல் செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். மத்திய அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும்போது, ஊழலுடன் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் மாநில அரசு. மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டு 210 நாட்களாகியும், அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, சென்னையில் 200 வார்டுகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x