Published : 21 Jul 2023 07:41 PM
Last Updated : 21 Jul 2023 07:41 PM

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மேயர் பிரியா அறிவுறுத்தல்

மேயர் பிரியா ஆய்வுக் கூட்டம்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (21.07.2023) ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மேயர் பேசுகையில், "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசஸ்தலையாறு வடிநில திட்டம், கோவள வடிநில திட்டம், உலக வங்கி நிதி, வெள்ளத் தடுப்பு நிதி, சிங்கார சென்னை 2.0 திட்டம், மூலதன நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளின்கீழ் 1,223 கி.மீ.நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் ரூ.2,325 கோடி செலவில் 727 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பருவமழை தொடங்குவதற்கு முன் விரைந்து முடிக்க வேண்டும். விடுபட்ட மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு முடித்திட வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் வண்டல் மற்றும் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவும், வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் உள்ள அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதில் செல்லும் வகையில் சீர்செய்யவும், மழைநீர் வடிகால் பணிகள் முடிவுற்ற இடங்களில் உடனடியாக சாலைப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் 2023-24ம் நிதியாண்டில் ரூ.433.28 கோடி மதிப்பீட்டில் 3,676 எண்ணிக்கையிலான 645.60 கி.மீ. நீளமுடைய சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் முடிந்த உடன் அவ்விடங்களில் மாநகராட்சியின் சார்பில் உடனடியாக சாலைப் பணிகளை அமைத்திடவும், ஒப்பந்ததாரர்கள் சாலைப் பணிகள் மேற்கொள்ளும் பொழுது, போடப்படும் சாலைகளின் தரம் மற்றும் உறுதித் தன்மை ஆகியவற்றை கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்." என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x