Published : 21 Jul 2023 06:20 AM
Last Updated : 21 Jul 2023 06:20 AM

முகாந்திரம் இருந்தால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

சென்னை: சென்னையை சேர்ந்த அரவிந்தாக்க்ஷன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா என்ற சத்யநாராயணன் கடந்த 2016 முதல் 2021 வரை அத்தொகுதியில் எம்எல்ஏ-வாக பதவி வகித்தார். பின்னர் 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு ரூ. 2.78 கோடி என தெரிவித்துள்ளார்.

அவருடைய சொத்து மதிப்பை வெளியிடும்படி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கோரியபோது, சட்டவிரோதமாக அவருடைய மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 13.02 கோடி என தெரியவந்துள்ளது. இதன்மூலம் அவர் தனது சொத்துமதிப்பை திட்டமிட்டு வேட்புமனுவில் குறைத்துக் காண்பித்துள்ளார். எனவே அவர் மீது ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,தி.நகர் முன்னாள் எம்எல்ஏ சத்யாவுக்கு எதிரான புகார் குறித்து 2 மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்துநடவடிக்கை எடுக்கலாம், எனலஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x