Published : 07 Nov 2017 08:49 PM
Last Updated : 07 Nov 2017 08:49 PM

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சலுகைகள் தேவை: மருத்துவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் ஒன்பதாவது மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் ஒன்பதாவது மாநில செயற்குழு கூட்டத்தில்  சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. மாநில தலைவர் டாக்டர். லட்சுமி நரசிம்மன் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1.மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும்.

2.அரசு மருத்துவர் அனைவருக்கும் பட்டமேற்படிப்பு மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

3.புதிய ஓய்வூதிய திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

4.மத்திய அரசு பெண் மருத்துவர்களுக்கு வழங்குவதைப் போல் மாநில அரசு பெண் மருத்துவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு 720 நாட்கள் வழங்க வேண்டும்.

5. அரசு மருத்துவர்கள் தங்கள் பணியில் இருக்கும் போது இறக்க நேரிட்டால் அவர்களுக்கு குடும்ப நல நிதி (corpus fund ) 2 கோடி வழங்கும் திட்டம் தொடங்க வேண்டும் .

6.தமிழகத்தில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் அண்டை மாநில மருத்துவர்கள் தேர்வு செய்துவிட்டதால் தமிழக மருத்துவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களில் இடம் இல்லை. இதனால் தமிழக மருத்துவர்கள் வட இந்தியாவிற்கு தேர்வு எழுத செல்ல வேண்டிய நிலை உள்ளது . இதில் அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்தில் தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக அதாவது 5 வது ஊதியக்குழு முதல் காலம் சார்ந்த சம்பள உயர்வு மற்றும் காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு உடனடியாக அரசாணை எண் 354 ஐ மறுபரிசீலனை செய்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல் 13 வது வருடத்தில் ஊதிய பட்டை 4 ( pay band 4 ) வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த செயற்குழுவில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x