

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, குமரி உள்பட பல தென் மாவட்டங்களில் ‘வாகைக்குளம்’ என்கிற பெயரில் இருபதுக்கும் அதிகமான கிராமங்கள் இருக்கின்றன.
ஆனால், திரு நெல்வேலியின் அம்பாசமுத்திரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருக்கும் வாகைக்குளம் ஊராட்சி, தனது பாரம்பரிய, கலைநயம் மிக்க பித்தளைக் குத்துவிளக்குகள், பித்தளை பக்தி சார்ந்த பொருள் களுக்காகப் புகழ்பெற்று விளங்குகிறது.
குத்துவிளக்கு என்றதுமே பலருக்கும் நினைவில் வரும் பெயர் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோவில். அதேபோல், செட்டிநாட்டுக் குத்துவிளக்குகளுக்கு அரியக்குடியும் காரைக்குடியும் புகழ்பெற்று விளங்கு கின்றன.
இந்த மூன்று ஊர்களுக்கும் இல்லாத சிறப்பு, வாகைக்குளம் குத்துவிளக்குகளுக்கு உண்டு. 3டி மாடலிங் தொடங்கி ‘லேசர் கட்டிங் லேத்’ வரை இத்தொழிலில் நவீனத் தொழில்நுட்பம் புகுந்துவிட்டது.
ஆனால், கடந்த இருநூறு ஆண்டு களாகக் களிமண் கொண்டு வார்ப்புரு செய்து, அதில் இயற்கையான முறை யில் உருக்கப்பட்ட பித்தளைக் குழம்பை ஊற்றி குத்துவிளக்குகள் செய்யும் கைவினை மரபு இன்னும் இங்கே உயிரோடு இருக்கிறது.