மயிலேறிச் சுற்றும் முருகன்! | நதி நகர்ந்த பாதை 1

மயிலேறிச் சுற்றும் முருகன்! | நதி நகர்ந்த பாதை 1
Updated on: 
3 min read

வத்தலக்குண்டு வழியாகக் கொடைக்கானல் மலை நோக்கிச் செல்கையில் `டம் டம் பாறை ‘ என்றோர் இடம் உண்டு. அங்கிருந்து பார்க்கையில், ஒரு மலையின் மீதிருந்து நீளமான வெள்ளை வால் தொங்குவதுபோல் ஓர் அருவி.

“அது என்ன அண்ணே?” என்று அங்கே பெட்டிக்கடை வைத்திருந்த சின்னையனிடம் கேட்டேன்.

“தண்ணி விழுகுதுப்பா. எலிவால் அருவின்னு சொல்வாங்க.”

`எலிவால் அருவி’. பொருத்தமான பெயர். பெயர் வைப்பதில் எளிய மனிதர்கள் சிறந்தவர்கள். தங்கள் வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்தில் சேகரித்த அறிவிலிருந்தும் அவர்கள் வைக்கும் பெயர்கள் பண்டிதத்தனம் இன்றி வெகு பொருத்தமாக இருக்கும்.

அந்தக் கடையில்தான் நான் `பன்’ பரமசிவத்தைச் சந்தித்தேன். பெட்டிக்கடை சின்னையன்தான் அந்தப் பெயரைச் சொல்லி ஆளையும் அறிமுகப்படுத்தினார்.

“பன்னு பரமசிவம், எங்க ஒரு வாரமா ஆளைக் காணாம்?”

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in