Published : 04 Sep 2017 10:18 AM
Last Updated : 04 Sep 2017 10:18 AM

குளிர்பானங்கள்

நம் வாழ்வோடு இரண்டற கலந்துவிட்டது குளிர்பானங்கள். குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் வரை இதனை அருந்தாமல் இருக்கமுடிவதில்லை. ஒருதரம் சுவை பழகி போனவர்களுக்கு இன்னும் சொல்லவே வேண்டாம். குளிர்பானங்கள் இரு வகைப்படும். காற்றடைக்கப்படாத குளிர்பானங்கள், காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள். இவை இரண்டிலும் மதுபானம் சுத்தமாக இருக்காது. அதிலும் குறிப்பாக காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களைத்தான் தற்போது மக்கள் அதிகம் விரும்புகின்றனர். 5 ரூபாய்க்கு எளிதாக கிடைப்பதால் கிராமங்கள் வரை குளிர்பான சந்தை எளிதாக சென்று சேர்ந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய குளிர்பான சந்தையில் கோலோச்சி நிற்கின்றன. அதேபோல காளீஸ்வரி போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் சந்தையின் தனி இடத்தை வைத்துள்ளன. நாளுக்கு நாள் இந்தியர்கள் அருந்தும் குளிர்பானத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த சந்தை இன்னும் வளர்ச்சி அடையும் என கணித்துள்ளனர். குளிர்பான சந்தை பற்றி சில தகவல்கள்….

மிகப் பெரிய நிறுவனங்கள்

  • கோகோகோலா
  • பெப்சிகோ
  • நெஸ்லே
  • சண்டோரி
  • டிஆர் பெப்பர் ஸ்னாப்பிள்
  • டேனோன்
  • கிரின்
  • ரெட்புல்
  • அஸாஹி
  • ஜேடிஇ

குளிர்பானங்களை அதிகம் குடிக்கும் நாடுகள் (ஒரு ஆண்டுக்கு தனிநபர் குடிக்கும் குளிர்பானத்தின் அளவு அடிப்படையில்)

  • அர்ஜெண்டீனா – 155 லிட்டர்
  • அமெரிக்கா – 154 லிட்டர்
  • சிலி – 141 லிட்டர்
  • மெக்ஸிகோ – 137 லிட்டர்
  • உருகுவே – 113 லிட்டர்
  • பெல்ஜியம் – 109 லிட்டர்
  • ஜெர்மனி – 98 லிட்டர்
  • சவூதி அரேபியா – 89 லிட்டர்

# 2020-ம் ஆண்டில் சர்வதேச குளிர்பானத்துறையின் சந்தை மதிப்பு 30,000 கோடி டாலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

# விற்பனையின் அடிப்படையில் அதிக சந்தை பகிர்வைகொண்டுள்ள நிறுவனம் கோகோகோலா

# சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 49 சதவீதம் குளிர்பான விற்பனை சந்தையை வைத்துள்ளன.

# சந்தை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள நிறுவனம் பெப்ஸிகோ. சர்வதேச அளவில் 22 சதவீத விற்பனை சந்தையை கொண்டுள்ளன.

குளிர்பானத்தின் வரலாறு

குளிர்பானங்கள் முதன் முதலில் பழச்சாறு சுவையை கொண்டிருந்தாகத்தான் இருந்தது. காற்றேற்றப்பட்ட குளிர்பானங்கள் அப்போது கிடையாது.

1485-1653 ஆண்டு காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் எலுமிச்சை சாறுடன் தண்ணீரை கலந்து இனிப்புடன் குளிர்பானத்தை குடித்து வந்தனர்.

பாரீசில் 1676-ம் ஆண்டில் எலுமிச்சை, தேன், தண்ணீர் கொண்டு தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனையில் சாதனை படைத்தன.

1767-ம் ஆண்டு முதன்முதலில் ஜோசப் பிரிஸ்டிலி என்ற நபர் தண்ணீரை கார்பன்-டை-ஆக்ஸைடுடன் வினை புரிய செய்து காற்றேற்றப்பட்ட தண்ணீரை தயாரித்தார். இது பின்னாளில் சோடாவாக உருவானது. இந்த தண்ணீர் அருமையான சுவையை தருகிறது என்பதை ஜோசப் பிரிஸ்டிலி உணர்ந்தார்.

# 1800-களில் காற்றேற்றப்பட்ட ஜிஞ்சர் பீர் (இஞ்சி) விற்பனைக்கு வந்தது.

# 1870-களில் இங்கிலாந்தில் கோலி சோடா விற்பனை அதிகமாக இருந்தன.

# 1886-ல் கோகோகோலா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய சந்தை

# 2016-ம் ஆண்டுப்படி இந்திய குளிர்பான சந்தையின் மதிப்பு ரூ.14,000 கோடி

# ஆண்டுக்கு 30 சதவீதம் இந்த துறை வளர்ச்சி கண்டு வருகிறது.

# கோகோகோலா மற்றும் பெப்ஸிகோ நிறுவனமும் இணைந்து இந்தியாவில் 60 சதவீத சந்தையை வைத்துள்ளன.

இந்திய குளிர்பான நிறுவனங்கள்

  • ஜெயந்தி பிவரேஜஸ்
  • ஸ்ரீ பிரெஹ்ம் சக்தி பிரின்ஸ் பிவரேஜஸ்
  • ஹஜூரி சன்ஸ்

# இந்தியாவில் காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களை 71 சதவீதம் பேர் அருந்தி வருகின்றனர்.

# குளிர்பானங்களை தொடர்ந்து அருந்துவதால் ஒரு மனிதனின் எடை ஒரு ஆண்டுக்கு 6.75 கிலோ கூடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

# கோகோகோலா நிறுவனம் மட்டும் சுமார் 150 குளிர்பானங்கள் வகைகளை தயாரித்து வருகின்றன.

# உலகம் முழுவதும் 41 சதவீத குழந்தைகள் ஒரு நாளைக்கு சோடா அல்லது குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர்.

# குளிர்பானங்கள் வருகையால் பொதுமக்கள் பால் அருந்துவது 33 சதவீதம் குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

# உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு 34 பில்லியன் கேலன்ஸ் குளிர்பானங்கள் விற்பனையாகிறது.

# குளிர்பானங்கள் வகைகள், சுவை சம்பந்தமாக 1,500 காப்புரிமையை அமெரிக்கா வைத்துள்ளது.

# கோகோகோலா நிறுவனத்தின் குளிர்பானங்கள் சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுவதும் 10,000 குளிர்பான பாட்டில்கள் விற்பனையாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x