Published : 23 May 2016 12:01 PM
Last Updated : 23 May 2016 12:01 PM

வெற்றி மொழி: வில்லியம் ஃபெதர்

1889 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த வில்லியம் ஃபெதர் அமெரிக்காவைச் சேர்ந்த பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர். பட்டப் படிப்பிற்கு பிறகு நிருபராக தனது வாழ்க்கையைத் தொடங்கி சுமார் ஐந்து வருடங்கள் பணியாற்றினார். பிறகு தனது பெயரிலேயே பத்திரிகை ஒன்றைத் தொடங்கி அச்சு வணிகத்தில் வெற்றிகரமாக விளங்கினார். தனது பத்திரிகையில் எழுதுதல் மற்றும் வெளியிடுதல் போன்றவை தவிர பிற இதழ்களிலும் ஆர்வமுடன் தனது எழுத்துப்பணியை மேற்கொண்டார். மேலும், பல புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

# ஒரு பட்ஜெட் எதை நாம் வாங்க முடியாது என்பதை நமக்கு சொல்கிறது. ஆனால், அதை வாங்குவதிலிருந்து நம்மை அது தடுப்பதில்லை.

# பங்குச்சந்தை பற்றிய வேடிக்கையான விஷயங்களில் ஒன்று: ஒவ்வொரு முறையும் ஒருவர் விற்கிறார் மற்றொருவர் வாங்குகிறார், இருவருமே இதை மதிநுட்பமானது என்று நினைக்கிறார்கள்.

# நீங்கள் இயற்கையிலேயே கனிவானவராக இருந்தால், நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களால் அதிகமானோரை ஈர்க்க முடியும்.

# பெண்கள் தங்கள் வயதைப்பற்றி பொய் சொல்கிறார்கள்; ஆண்கள் தங்கள் வருமானத்தைப்பற்றி பொய் சொல்கிறார்கள்.

# வாழ்க்கையை நன்கு அனுபவித்து வருகின்ற எந்த மனிதனும் தோல்வியுற்றவன் அல்ல.

# நாம் நமக்கு ஒழுக்கமாக இல்லையென்றால், இந்த உலகம் அதை நமக்காக செய்யும்.

# ஒரு சிறந்த புத்தகத்தை படித்து முடிப்பது என்பது, ஒரு நல்ல நண்பரை பிரிவதைப் போன்றது.

# சோகம் என்னவென்றால், பலரிடம் லட்சியம் உள்ளது ஆனால் சிலரிடம் மட்டுமே திறன் உள்ளது.

# உங்கள் வேலையில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்களுடைய மற்ற கவலைகளை உங்களால் மறக்க முடியும்.

# புத்தகங்கள் உங்கள் மனதை திறக்கவும், விரிவுபடுத்தவும் மற்றும் உங்களுக்கு வலுசேர்க்கவும் செய்கின்றது.

# சில அடிப்படை தகுதிகளில் பற்றாக்குறை இருந்தாலும்கூட தற்காலிக வெற்றியை பெறமுடியும். ஆனால், கடின உழைப்பு இல்லாமல் அதனை தொடர்ந்து பராமரிக்க முடியாது.

# நம்மில் சிலர், எதுவும் செய்யாமல் எதை வேண்டுமானாலும் பெற்று விடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x