Published : 02 Nov 2015 10:19 AM
Last Updated : 02 Nov 2015 10:19 AM

வெற்றி மொழி: செயின்ட் அகஸ்டீன்

செயின்ட் அகஸ்டீன் உலகின் பல கிறித்துவ திருச்சபைகளால் பெரிதும் போற்றப்படுகின்ற தலைசிறந்த இறையியல் அறிஞர் ஆவார். மிகப்பெரிய கிறித்துவ சிந்தனையாளர்களில் புகழ்பெற்ற ஒருவராக கருதப்படுகிறார். மேற்கத்திய கிறித்துவ வளர்ச்சியில் இவரது எழுத்துகள் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்கின.

கிறித்துவ மெய்யியல் மற்றும் இறையியல் கொள்கைகளுக்கான பல நூல்களை இயற்றியுள்ளார். சொற்பொழிவுகள் மற்றும் கடிதங்கள் உட்பட எண்ணற்ற படைப்புகளைக் கொடுத்துள்ளார். மனித சுதந்திரம் மற்றும் அதன் செயல்பாடு ஆகியவற்றை தனது படைப்புகளில் பிரதிபலித்தார். இவர் புனிதர் என்றும் தலைசிறந்த திருச்சபைத் தந்தை என்றும் மதிக்கப்படுகிறார்.

அன்பு உங்களுக்குள் வளர ஆரம்பிக்கும்போது அழகும் வளர தொடங்குகின்றது.

நம்பிக்கை என்பது எதை நீங்கள் பார்க்கவில்லையோ அதை நம்புவது; அந்த நம்பிக்கையின் வெகுமதி என்பது எதை நம்பினீர்களோ அதை பார்ப்பது.

இந்த உலகம் ஒரு புத்தகம்; யார் இதில் பயணம் செய்யவில்லையோ அவர்கள் இதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கின்றார்கள்.

எல்லாம் கடவுளை சார்ந்தது என்பதைபோல் பிரார்த்தனை செய்யுங்கள்; எல்லாம் உங்களை சார்ந்தது என்பதைபோல் செயலாற்றுங்கள்

இரண்டு நண்பர்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள், ஒரு நண்பரை இழந்துவிடுவீர்கள்; இதையே இரண்டு அந்நியர்களுக்கிடையே செய்யும்போது ஒரு நண்பரை பெறுவீர்கள்.

சொல்லப்பட்டவை கருத்துகள் மட்டுமே, உங்கள் அனுபவத்தின் மூலமே அதனுள் செல்ல வேண்டும்.

நீங்கள் ஏற்றத்தை விரும்புகிறீர்களா? அப்படியானால் முதலில் இறக்கத்திலிருந்து தொடங்குங்கள்.

பொறுமை என்பது ஞானத்தின் துணை போன்றது.

மற்ற எல்லா நல்லொழுக்கங்களுக்கும் அடித்தளம் பணிவே.

அற்புதங்கள் என்பவை இயற்கைக்கு மாறான விஷயங்கள் அல்ல.

பொறாமை குணத்துடன் இருக்கும் ஒருவர் அன்புடன் இருக்க முடியாது.

மனந்திருந்திய கண்ணீர் குற்றத்தின் கறையை நீக்குகின்றது.

அனைத்து போர்களின் நோக்கமும் சமாதானமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x