Last Updated : 16 Mar, 2018 09:10 AM

 

Published : 16 Mar 2018 09:10 AM
Last Updated : 16 Mar 2018 09:10 AM

வணிக நூலகம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ன்றுபடுதலையும் அதற்கு ஆதாரமான உடன்பாடுகளையும் REID HOFFMAN என்ற நூல் ஆசிரியர் தன்னுடைய ALLIANCE என்ற புத்தகத்தில் எழுதியுள்ளது நம்மை சிந்திக்க வைக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த எல்லோரும் செயல்படுத்துகின்ற சில செய்திகளை நூல் ஆசிரியர் விவரிக்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது. LINKED IN என்ற நிறுவனத்தை தொடங்கி இரண்டு இணை நிறுவனர்களை இணைத்துக் கொண்டு சொந்த அனுபவங்களையும் கருது கோள்களையும் ஒருங்கிணைத்து அளித்துள்ள இந்த புத்தகம் நிறுவனங்களை நிர்வகிப்பவர்களுக்கும், தொடர்ந்து பணிமாற்றம் செய்பவர்களுக்கும் ஒரு ஊன்றுகோலாய் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

பூனை எலி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் நிறுவன நிர்வாகங்களுக்கு எதிர் மாறான கருத்துகளை வெற்றிக்கான காரணிகளாக விரிவாக எடுத்துக் கூறுகிறார்கள். எந்த ஒரு நிறுவனத்திலும் பணியாளர் அடுத்த வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பணியமர்த்தியவரோ சரியான வாய்ப்பை பயன்படுத்தி வெட்டுவதற்கு காத்திருக்கிறார். பணிதாவுதல் என்ன என்பதை வெகு அழகாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள். உலகளாவிய சிறந்த பணியாளர்களின் ஆளுமைக் குறிப்புகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி பணியாளர்களும் பணியமர்த்துபவர்களும் செய்து கொள்ள கூடிய ஒப்பந்தங்களைக் குறித்து விரிவாக எடுத்துக் கூறுகின்றார்கள்.

பணியமர்த்துபவர்கள் வாழ்நாள் பணியையும், விழிப்புணர்வையும் ஒரு சேர வைத்து இருக்க மாட்டார்கள். அதேபோன்று பணியாளர்கள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதை விரும்புவது இல்லை. உடன்பாடு என்ற இந்த நூல் எவ்வாறு பணியாளர்களும் பணியமர்த்துபவர்களும் மற்றவரில் முதலீடு செய்கிறார்கள் என்றும் பணியாளர்களின் பணியமர்த்தும் திறமைகள் பற்றியும் கீழே விரிவாக காணலாம். அவ்வாறு உடன்பாடு ஏற்படும் பொழுது குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகளுக்குக் கீழ்காணும் மூன்று வகையான பயணங்களை மேற்கொள்ளும் பொழுது உடன்பாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் ஒத்துப்போயும் வெற்றிக்கு வழிதேடியும் இணைகிறார்கள்.

1. சுழற்சிப் பயணம்

2. நிலையை மாற்றும் பயணம்

3. அடித்தளம் நோக்கிய பயணம்

பணியில் ஏற்படக்கூடிய இந்தப் பயணங்கள் உணர்வு பூர்வமாகவும், பணி சார்ந்தது ஆகவும் இணைக்கும் இணைப்பு பாலமாகவும் செயல்படுவது நம்பிக்கை அளிக்கிறது. ஒரு பணியாளர் பயணிக்கும் பொழுது நிறுவன கட்டமைப்புகளைப் பற்றியும் உடன் பணிபுரியும் பணியாளர்களின் வேதியியல் பற்றியும் அறிந்து கொள்ள ஏதுவாகிறது.

சுழற்சிப் பயணம்

எந்த ஒரு நிறுவனத்தில் பணியேற்றாலும் அனைத்துத் துறைகளிலும் பிரிவுகளிலும் பழக்கம் இருந்தால் மட்டுமே நிறுவனம் பற்றிய முழு புரிதல் ஏற்படும். இன்றைய கால கட்டங்களில் துறை சார்ந்த நுண்ணிய பணி சார்ந்த தனித்துவத்தை நிறுவனங்களும் பணியாளர்களும் பெரிதும் விரும்புகிறார்கள், பணி தொடர்பான விரக்தியும், விட்டு விலகும் மனப்பான்மையும் ஏற்படுவதற்கு இவைகளும் காரணங்களாக அமைகின்றன. முழுமையான புரிதல் வேறு வேறு வகையான அனுபவங்களையும் உள்ளுணர்வுகளையும் ஏற்படுத்தும் பொழுது நிறுவனத்தின் மீது பிடிப்பு கூடுகிறது. வெகுவாக வெற்றி பெற்ற கடந்த கால நிறுவனங்கள் சுழற்சிப் பயணத்தைக் கட்டாயமாக வைத்திருந்தனர். மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் அனைத்து துறைகள் மற்றும் பிரிவுகளில் ஏற்படக் கூடிய புரிதல் பின்னாளில் தேவையற்ற குழப்பங்களையும், கருத்து வேறுபாடுகளையும் தவிர்ப்பதற்கு மிக முக்கியமான காரணியாக அமைகிறது.

நிலையை மாற்றும் பயணம்

அடிமட்டத்தில் இருந்து பணியை தொடரும் பணியாளர் மேல் மட்டத்தை நோக்கிச் செல்லும் போது கால நிர்ணயம் தேவையற்றது. வேலைபற்றிய குறியீடு தேவையற்றது. மாறாக, வேலை பற்றிய புரிதல் தேவைப்படும். கால நிர்ணயம் செய்யும் பொழுது குறித்த காலத்திற்குள் குறித்த பதவியில் இருந்து உயர் பதவிக்கு முன்னேறும் பொழுது மற்றவை அடிபட்டு போய்விடுகின்றன. எனவே, பணியாளர்களின் பதவி உயர்வும் அவர்கள் இருக்கக் கூடிய இடங்களும் நிச்சயமாக மாற்றப்பட்டே ஆக வேண்டும் என்ற கருதுகோளை மாற்றிக் கொள்வது நல்லது. இரண்டில் இருந்து ஐந்து ஆண்டுக்குள் பணியாளர்களுக்கு இது போன்ற பயிற்சிகள் அளித்தல் சிறந்தது. பதவி உயர்வு ஆரம்ப காலத்தில் வேகமாகவும் அடுத்தடுத்த காலங்களில் சரியாகவும், நிதானமாகவும் நிகழும் பொழுது உற்பத்தித் திறன் வெகுவாக மாறுகிறது. சில நிறுவனங்கள் அடுத்தடுத்த பதவி உயர்வுகளை திடீர் உணவு வகைகளை சமைப்பதைப் போல அள்ளி வழங்கும் போது அவற்றின் அர்த்தமும் பணிக்குத் தயார் படுத்திக் கொள்ளும் திறமைகளும் காணாமல் போய்விடுகின்றன. எனவே பணியமர்த்தி பயணத்தை எண்ணிக்கையில் மேற்கொள்ளாமல் இலக்கை நோக்கி மேற்கொள்ளுவது மிகவும் சிறந்தது.

அடித்தளம் நோக்கிய பயணம்

JONY IVE என்ற ஆப்பிள் நிறுவன ஊழியர் இந்த பயணத்திற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறார். புரிதலும், இணக்கமும் ஒருவரைப் பற்றிய நம்பிக்கையை ஏற்படுவதற்கு அடித்தளம் நோக்கிய பயணம் அவசியம் ஆகிறது. நிறுவனத்தில் என்ன நடக்கிறது. திறமையாக செயல்படுபவர்கள் யார். திறமையான செயல்களை வளர்ப்பது எப்படி என்ற முறைகளை அடித்தளம் நோக்கிய பயணம் அள்ளித்தரும். மேல் நோக்கிய பயணம் ஒரு பக்க பார்வையை ஏற்படுத்துவதால் கீழே நடப்பது தெரியாமல் பெருவாரியான மேலாளர்களும், தொழில் முனைவோர்களும் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு இருந்து விழும் பொழுது கடினமான வீழ்ச்சியாக இருக்கும். மாறாக கீழ் நோக்கி செல்லும் போது அடித்தளத்தை அறிந்த மேலாளர்கள் அடுத்து நிகழ்த்தக் கூடிய அற்புதத்தைத் தான் நூலாசிரியர் சுய அனுபவமாக எழுதியிருக்கிறார். இந்த பயணம் நிறுவன இலக்குகளை வரிசைப்படுத்தவும், சீரமைக்கவும் பணியாளர்களின் திறன் பற்றிய புரிதலையும் வாரி வழங்குகிறது.

பயணங்களின் பயன்கள்

சில நேரங்களில் பணித்தொடர்பான பேச்சு வார்த்தைகளைக் குறிப்பிட்டு கேட்கப்படும் கேள்விகள் உடன்பாடு ஏற்படுவதற்கு வலுசேர்க்கும் எந்த வகையான திறமைகளை இரண்டில் இருந்து மூன்று ஆண்டுக்குள் வளர்த்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை அறிந்துக் கொள்ளும் போது, சுழற்சிப் பயணம் வெகுவாக பணியாளர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது. பேச்சு வார்த்தைகள் மூலமும் கலந்துரையாடல் மூலமும் பணியாளர்களின் இலக்குகளை அறிந்துக் கொள்ளும் போது அதற்கு தகுந்தார் போல துறைகளிலும் பிரிவுகளிலும் நாட்களை கூட்டியும் கழித்தும் கற்றல் அனுபவம் உதவுகிறது. அடுத்ததாக இந்த நிறுவனத்தில் பணியாற்றிய பின் எந்த மாதிரியான பணியை விரும்புகிறீர்கள் என்ற கேள்வி, நிலையை மாற்றும் பயணத்திற்கு உதவியாக இருக்கின்றது. ஒரு வேளை இருந்த பணியில் ஈர்ப்பு இல்லாதவர்கள் இந்த கேள்விக்கு கிடைக்கும் விடையின் மூலம் சரியான இடத்திலும் சரியான பதவியிலும் அமர்வதற்கு உதவிகரமாக இருக்கிறது. எந்த பணியாளருடன் இணக்கமாக பணியாற்றினார் என்பது ஆளுமை பற்றிய திறமைகளை அறிந்து கொள்ள உதவுகிறது. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அறிபூர்வமான வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்ளும் திறமை உள்ளவராக எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ளவும் இந்த பயணம் ஏதுவாக இருக்கும்.

rvenkatapathy@rediffmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x