Published : 26 Feb 2018 10:27 AM
Last Updated : 26 Feb 2018 10:27 AM

வெற்றி மொழி: புக்கர் டி வாஷிங்டன்

1856-ம் ஆண்டு முதல் 1915-ம் ஆண்டு வரை வாழ்ந்த புக்கர் டி வாஷிங்டன் அமெரிக்க கல்வியாளர், சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். ஆப்பிரிக்க அமெரிக்க சமூகத்தின் அதிகாரமிக்கத் தலைவராக விளங்கினார். மேலும், அமெரிக்க அதிபர்களுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றங்களின் மேம்பாட்டிற்கான முயற்சிகளுக்காக அறியப்படுபவர். ஆப்பிரிக்க அமெரிக்க வணிகங்களின் முக்கிய ஆதரவாளராகவும், தேசிய நீக்ரோ வணிகக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். அமெரிக்க நாட்டின் தபால்தலையில் இடம்பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் இவரே.

# வாழ்க்கையில் ஒருவர் எந்த நிலையை அடைந்தார் என்பதால் வெற்றி அளவிடப்படுவதில்லை, அவர் கடந்து வந்த தடைகளால் அளவிடப்படுகிறது.

# நீங்கள் உங்களை உயர்த்திக்கொள்ள விரும்பினால், வேறு ஒருவரை உயர்த்துங்கள்.

# நல்ல தரமான நபர்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

# வாழ்க்கையின் வெற்றியானது பெரிய விஷயங்களைக் காட்டிலும் சிறிய விஷயங்களின் மீது கவனம் செலுத்துவதில் நிறுவப்பட்டுள்ளது.

# குணமே மனிதனை உருவாக்குகிறது, சூழ்நிலைகள் அல்ல.

# மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள், மற்றவர்களுக்காக அதிக உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள்.

வெற்றி எப்போதுமே அதன் காலடித்தடங்களை விட்டுச்செல்கிறது.

# ஒருவனுக்கு என்ன தெரியும் என்பதைப்பற்றி இந்த உலகம் சிறிதளவே கவனிக்கிறது; அவனால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றியே அதிகம் கவனிக்கிறது.

# வாய்ப்புகள் ஒருபோதும் இரண்டாவது முறையாக வருவதில்லை, நமது ஓய்வு நேரத்திற்காக காத்திருப்பதும் இல்லை.

# அறியாமை, குறுகிய மற்றும் சுயநல மேகங்களுக்கு மேலாக நாம் அனைவரும் உயர்ந்து நிற்கவேண்டும்.

# கெட்ட நபர்களுடனான சகவாசத்தை விட தனியாக இருப்பதே சிறந்தது.

# உங்களிடம் சிறந்தது எது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

# நம்மைத் தவிர வேறு எவரும் நம்மை அவமதிக்க முடியாது.

# ஒவ்வொருவரும் அவருக்கான வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x