Published : 08 Jan 2018 10:50 AM
Last Updated : 08 Jan 2018 10:50 AM

பேட்டரி வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட்

பே

ட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்குவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும் மக்களை ஊக்குவிக்க, மூன்று ஆண்டுகளுக்கு பார்க்கிங் கட்டணத்திலிருந்து விலக்கு அளிப்பது மற்றும் சுங்க சாவடிகளில் சாலை வரியிலிருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டு வரைவை நிதி ஆயோக் தயாரித்து வருகிறது.

வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகள், அரசு அலுவலகங்களில் பேட்டரி வாகனங்களை நிறுத்த 10 சதவீத இடத்தை ஒதுக்குமாறு பரிந்துரைத்துள்ளது. தற்போது இந்தியாவில் 6 வகையான நம்பர் பிளேட்கள் புழக்கத்தில் உள்ளன. கறுப்பு எழுத்துகள் வெள்ளை பின்னணியில் பொறிக்கப்பட்டவை சொந்த உபயோக வாகனங்கள். மஞ்சள் நிற பின்னணியில் கறுப்பு எழுத்துகள் கொண்ட நம்பர் பிளேட் உடைய கார்கள் வர்த்தக ரீதியில் இயக்கப்படுபவை. கறுப்பு பின்னணியில் மஞ்சள் எண்களைக் கொண்டவை வாடகை வாகனங்கள். நீல நிற பின்னணியில் வெள்ளை எழுத்துகளைக் கொண்டவை தூதரக வாகனங்களாகும். சிவப்பு நிற நம்பர் பிளேட்கள் குடியரசுத் தலைவர் , ஆளுநர் வாகனங்களுக்கானது. ராணுவ உபயோகத்துக்கான வாகனங்கள் பிரத்யேக எண்களைக் கொண்டவையாக இருக்கும். இதில் முதல் எழுத்து மற்றும் மூன்றாம் எழுத்தில் மேல் நோக்கி அம்புக்குறி கொண்டதாயிருக்கும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x