வந்தாச்சு புதிய தனிமம்!

வந்தாச்சு புதிய தனிமம்!
Updated on
1 min read

வேதியியல் தனிம அட்டவணை பற்றி பள்ளிக்கூடத்தில் படித்திருப்பீர்கள். இதோ, அந்த அட்டவணையில் ஒரு புதிய தனிமம் சேர இருக்கிறது. ஸ்வீடனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புதிய தனிமத்தைக் கண்டறிந்துள்ளனர். ரஷ்ய, அமெரிக்க அறிவியாளர்கள் 10 ஆண்டுகளுக்கு கருதுகோளாக முன்வைத்த இந்தப் புதிய தனிமம், இப்போது உறுதியாகியுள்ளது. வாயில் நுழையாத பெயர்கொண்ட அந்தத் தனிமத்துக்கு அன்அன்பென்டியம் (ununpentium) என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. குறுகியகாலம் மட்டுமே இருக்கக்கூடிய, இந்தக் கன உலோகம் தனிம அட்டவணையில் 115வது இடத்தைப் பிடிக்க உள்ளது. ஆனால் அமெரிக்காவை மையமாகக் கொண்ட நேரடி மற்றும் பயன்முறை வேதியியல் சர்வதேசக் கூட்டமைப்பு (International Union of Pure and Applied Chemistry) அங்கீகரித்தால் மட்டுமே இந்தத் தனிமம், அட்டவணையில் இடம்பிடிக்கும். அதுவரை இந்த இடம் தற்காலிகமானதுதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in