

நிரஞ்சனி
ஒருவரின் தனித்துவத்தையும் ரசனையையும் வெளிப்படுத்தும் அடையாள மாக ‘ஃபேஷன்’ மாறிவிட்டது. இதை மையமாகக் கொண்டு, வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ’கஸ்டமைஸ்டு’ ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் ‘ஃப்ரே லேபிள்’ (Fray Label) எனும் நிறுவனத்தை நிர்வகித்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரான நிரஞ்சனி.
கல்லூரியில் தொடக்கம்
துணி வியாபாரம் என்றாலே ‘ரெடிமேட்’ ஆடைகள்தான் சட்டென நினைவுக்கு வரும். ஆனால், அண்மைக்காலமாகத் தனிநபர் விருப்பத்துக்கு ஏற்பப் பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் ‘கஸ்டமைஸ்டு’ ஆடைகளுக்கான வரவேற்பு அதிகரித்துவருகிறது.
ஒருவரின் விருப்பத்துக்கேற்ப துணி, நிறம், வடிவமைப்பு, அளவு என அனைத் தையும் தேர்வுசெய்து, அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடையை உருவாக்குவது இதன் சிறப்பு.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம். (ஹானர்ஸ்) படித்துக் கொண்டிருந்தபோது, கல்லூரியில் செயல் பட்ட மாணவர் களுக்கான தொழில் முனைவோர் பிரிவில் இணைந்து தனது முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறார் நிரஞ்சனி.
அதைத் தொடர்ந்து ஆடை வடிவ மைப்பில் தனக்கிருந்த ஆர்வத்தைத் தொழிலாக மாற்றிக் கொண்டி ருக்கிறார். “ஃபேஷன் துறையில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வத் தோடு ஐந்து பேர் கொண்ட குழுவாக ‘ஃப்ரே’ எனும் ‘கேம் பஸ் கம்பெனி’யைத் தொடங்கினோம்.
‘ஃபிரே’ என்றால் ‘துணி’. தொழிலுக்கான ஐடியாவை ஆசிரியரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றவுடன் கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயே மற்ற மாணவர்களிடம் விற்பனை செய்யலாம். இப்படித் தான் ‘ஃப்ரே’ ஆரம்பமானது.
படித்துக்கொண்டிருந்த காலத்தில் போதுமான அளவு முதலீடு இல்லாததால் ஏற்கெனவே பயன் படுத்தி வந்த போன்கேஸை அழகுபடுத்து வது, ஷுக்களில் டிசைன் வரைவது போன்று ‘அப்சைக் கிளிங்’ ‘ரீவாம்ப்பிங்’ விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தினோம்.
கல்லூரிப் படிப்புக்குப் பிறகு நண்பர்கள் நால்வரும் மேற்படிப்பு, வேலை என வேறு பாதையில் பயணித்தனர். ஆனால், நான் இத்துறையில் இயங்கவே விரும் பினேன். எனவே ‘ஃப்ரே’ என்பதை ‘ஃப்ரே லேபிள்’ எனப் பெயர் மாற்றி 2018ஆம் ஆண்டு முதல் முழு வீச்சில் தொழிலில் இறங்கிவிட்டேன்” என்று பின்னணி யைச் சொல்கிறார் நிரஞ்சனி.
எல்லாம் ஓர் இடத்தில்...
துணி வாங்குவது, தைப்பது, ஸ்டைல் செய்வது என வாடிக்கை யாளருக்குத் தேவை யான அனைத்தும் ஒரே கூரையின்கீழ் கிடைக்க வேண்டும் என்பதே நிரஞ்சனியின் எண்ணம். அந்த எண்ணத்தின் அடிப்படையில் உரு வானதுதான் ‘ஃப்ரே லேபிள்’ என்கிறார் அவர்.
“முதலில் இந்தத் தொழிலைத் தொடங்கிய போது எனக்குத் தையல் தெரியாது. ஆனால், என்னுடைய அம்மா தைப்பதைச் சிறு வயது முதலே பார்த்திருக்கிறேன்.
துணி வாங்குவதற்கான சரியான விற்பனை யாளரைத் தேடி அலைந் தது தொடங்கி, தையல் கற்றுக்கொண்டதுவரை தொழிலைச் சீராக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் தேவைப் பட்டன. இன்று நான் மட்டுமன்றித் தையல் கலைஞர், ஸ்டைலிஸ்ட் என ஒரு குழுவாக வளர்ந்திருக்கிறோம்.
வழக்கமான துணிக்கடை போல இல்லாமல், இணைய வழித் தொழிலாகவே செயல்பட்டு வருகிறோம். விரைவில் இணைய தளத்தையும் தொடங்கஉள்ளோம். இன்ஸ்டா கிராம், கூகுள் பேஜ் உள்ளிட்ட தளங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் வருகி றார்கள்.
ரெடிமேட் ஆடைகளுக்கான சந்தை வேறு. ‘கஸ்டமைஸ்டு’ ஆடை களுக்கான சந்தை வேறு. எம்பிராய்டரி, பாக்கெட் அளவு பெரிதாக இருக்கும் ஆடைகள், மேட்சிங் ஃபேமிலி அவுட்-ஃபிட்கள் எனப் பல்வேறு வகையான ஆடைகளைத் தயாரித்துவருகிறோம்.
நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கான பிரத்யேக உடைகளையும் தயாரிக் கிறோம். இதோடு கல்லூரி காலத்தில் தொடங்கிய ‘அப்சைக்கிளிங்’ பணிகளை இன்றும் தொடர்கிறோம்” என்றார்.
சவால்களைச் சமாளித்து...
“ஆரம்பத்தில் டெலிவரி போன்ற விஷயங்களில் சவால்கள் இருந்தன. ஆனால், கஸ்டமைஸ்டு ஆடைகள் குறித்து மக்களிடையே புரிதலும் ஆர்வமும் உள்ளது.
குறிப்பாகப் பிறந்தநாள், திருமணம் போன்ற சிறப்பு நாள்களில் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிய விரும்புகின்றனர்.
அவர்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைத்துத் தருவதால் ஆர்டர்களும் நிறைய வருகின்றன. தொடர்ந்து வாடிக்கையாளர்களின் விருப்பத்தைச் சிறப்பாக நிறைவேற்று வோம் என நம்புகிறேன்” என்கிறார்.
‘ஃபிரே லேபிள்’ இன்ஸ்டாகிராம் பக்கம்: instagram.com/fraylabel
- karthiga.rajendran@hindutamil.co.in