Last Updated : 23 Aug, 2022 07:20 AM

 

Published : 23 Aug 2022 07:20 AM
Last Updated : 23 Aug 2022 07:20 AM

சேதி தெரியுமா?

ஆக.7: சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

ஆக.8: பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 19 வெண்கலம் என 61 பதக்கங்களை வென்று நான்காமிடம் பிடித்தது.

ஆக. 9: சென்னையில் நடைபெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிரணியும் ஆடவர் அணியும் வெண்கலப் பதக்கங்களை வென்றன.

ஆக.11: இலவசத் திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆக.11: இந்தியாவின் 14ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஆக. 11: காமன்வெல்த் வாள்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.

ஆக. 12: உச்ச நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்தார். இவர் ஆகஸ்ட் 27 அன்று பதவியேற்பார்.

ஆக. 13: அகில இந்திய வானொலியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி (87) மும்பையில் காலமானார்.

ஆக.14: தமிழகத்தில் புதிதாக சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம், வடுவூர் பறவைகள் சரணாலயம், கஞ்சிரங்குளம் பறவைகள் சரணலாயம் ஆகியவற்றுக்கு ராம்சர் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஆக.15: சுதந்திர தின விழாவையொட்டி தகைசால் தமிழர் விருதை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கும், டாக்டர் அப்துல் கலாம் விருதை ச. இஞ்ஞாசிமுத்துவுக்கும், கல்பனா சாவ்லா விருதை பா. எழிலரசிக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

ஆக.16: இந்திய கால்பந்து சங்கத்தை சர்வதேச கால்பந்து சங்கமான ‘ஃபிபா’ தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

ஆக.20: மத்திய உள் துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவின் பதவிக் காலம் மூன்றாவது முறையாக மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x