Published : 17 Jan 2018 01:27 PM
Last Updated : 17 Jan 2018 01:27 PM

எந்த மாதிரியான வீடு உங்களுக்கு கட்டுப்படியாகும்?

வீடு வாங்க வேண்டும் என்ற, உங்கள் வாழ்வை மாற்ற போகிற மிகப் பெரிய முடிவை எடுத்து விட்டீர்கள். ஆனால் எந்த மாதிரி வீட்டை வாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டீர்களா? உங்களின் நிதி நிலைமைகேற்ற வீடு எது என்பதை தீர்மானித்து விட்டீர்களா?

ஒரு சொத்தை வாங்குவதற்கு உங்கள் ஆற்றலை தீர்மானிக்கின்ற மிக முக்கிய காரணி, மாத தவணை செலுத்துவதற்கான திறனாகும். நீங்கள் வாங்கக்கூடிய சொத்துக்களின் மதிப்பை யதார்த்தமாக மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

உங்கள்து  நிதி நிலமையை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிகளை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டு கொள்ளுங்கள்

1. வருடாந்திர வருமானம் - உங்களின் ஆண்டு வருமானமாக நீங்கள் வாங்கும் சமபளம் மற்றும் பிற வழிகளில் உங்களுக்கு வரும் பணத்தை கணக்கிட்டு கொள்ள வேண்டும். நீங்கள் வீட்டு கடன் வாங்கும் பட்சத்தில் உங்கள் வருமானத்திலிருந்து மாதத் தவணை செலுத்தியது போக உங்களின் பிற / எதிர்பாரா செலவுகளை நிர்வகிக்கப் போதுமானதாக இருக்க வேண்டும். 

2. மாதாந்திர கடன் / செலவினங்கள் - மளிகைப்பொருட்கள், பயன்பாடுகள், உடல்நலம், பொழுதுபோக்கு, காப்பீடு, கடன் அட்டைகள், கட்டணம் அல்லது கடன்கள் என ஒவ்வொரு மாதமும் நிகழும் செலவுகளை மதிப்பிட்டு கொள்வது மிக முக்கியம்.

3.முன்பணம் - ஒரு வீட்டை வாங்கும் போது,  ​அந்த வீட்டின் மதிப்பிலிருந்து ​10-20% முன் பணமாக செலுத்த வேண்டும். எனவே அந்த அளவுக்காவது உங்களின் சேமிப்பில் பணம் இருக்க வேண்டும்.

4. க்ரெடிட் ஸ்கோர் - ஒவ்வொரு நபருக்கும் வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களில் இதற்கு முன் பெறப்பட்ட கடன் மற்றும் அது திரும்ப செலுத்திய விதத்தின் அடிப்படையில் அவர்களது கிரெடிட் ஸ்கோர் எனப்படும் CIBIL மதிப்பெண் இருக்கும். அதனை அடிப்படையாக கொண்டே கடன் மற்றும் வட்டியின் அளவினை வங்கி வரையறுக்கும். எனவே நீங்கள் உரிய நேரத்தில் உங்களின் கடன் மற்றும் தவணைகளை திரும்ப செலுத்தியிருக்க வேண்டும்.

actionbarlogo 2 1 2jpgright

மேலே கூறப்பட்ட குறிப்புகள் வீடு வாங்குவதற்கான நிதியுடன் தொடர்புடையவை என்றாலும், அனைவருக்கும் உகந்த வீட்டு வசதிகளை உருவாக்குவதில் அரசாங்கமும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சொத்து வாங்கல் மற்றும் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் சட்டங்களை உருவாக்கியதுடன், பிரபலமான சிறுதொழில் திட்டங்களுக்கு சிறப்பு குடியிருப்புகளை வழங்கல் எனப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கடன்களை பெறுவது எளிதாகியுள்ளது.

நீங்கள் முதல் முறை வீடு வாங்குபவராக இருந்தால் உங்கள் நிதி நிலமையை மீறி வீட்டு கடன் வாங்கமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அதிக கடன் சுமை அவசர தேவைகளுக்கான உங்கள் சேமிப்பை தின்றுவிடும்.

நீங்கள் கடனுக்காக விண்ணப்பிக்கும் வங்கியை அணுகி அவர்களால் அங்கீகரிகப்பட்ட பில்டர்களிடம் வீட்டை வாங்குவது நல்லது. அதே நேரத்தில் உங்களுக்கான க்ரெடிட் ஸ்கோரையும் தெரிந்து கொண்டு உங்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் வீட்டை தேர்ந்தெடுக்கலாம்.

எதிர்காலத்தில் திடீர் செலவுகள் வரும்பட்சத்தில், அதற்காக ஒரு தொகையை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்பது சிறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x