பத்தில் தொடங்கியது எழுபதிலும் தொடர்கிறது | வாசிப்பை நேசிப்போம்

பத்தில் தொடங்கியது எழுபதிலும் தொடர்கிறது | வாசிப்பை நேசிப்போம்
Updated on
1 min read

தினமும் வீடு வீடாகச் சென்று நாளிதழ் போடுபவர் கையில் வண்ண அட்டைப் படத்துடன் ‘ராணி’ வார இதழைப் பார்த்தபோது எனக்குப் பத்து வயது. அன்றே ஓரணா கொடுத்து அதை வாங்கிப் படித்தேன். அதில் மூளைக்கு வேலை, சிறுகதை, தொடர்கதை, மருத்துவம், அரசியல், சினிமா, ராசிபலன், பிரபலங்களைப் பற்றிய செய்திகள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் சாவி, அம்புலிமாமா போன்றவற்றையும் படிக்கத் தொடங்கினேன். கீழே கிடக்கும் எந்தத் தாளைக் கண்டாலும் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in