வாடிக்கையாளர் சேவையே வெற்றியின் ரகசியம்! | முகங்கள்

வாடிக்கையாளர் சேவையே வெற்றியின் ரகசியம்! | முகங்கள்
Updated on: 
2 min read

கரோனாவால் முடங்கிய தொழிலை இணையத்துக்கு மாற்றி அதிக லாபம் ஈட்டிவருகிறார் திருப்பூரைச் சேர்ந்த வத்சலா. ‘சிவமயம் காட்டன்’ இவரது அடையாளம். சொந்தத் தறியில் ஆடைகளை உற்பத்திசெய்து விற்பனை செய்யும் இவர், ஆடைத் தொழிலில் எண்ணற்ற நுணுக்கங்களைக் கற்றுவைத்துள்ளார்.

இந்தத் தொழிலை ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திவரும் இவர், “தொழிலில் லாபத்தைக் குவிக்க வேண்டுமென்றால், சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று வெற்றிச் சூத்திரம் பகிர்கிறார்.

வத்சலா திருப்பூரில் பிறந்து வளர்ந்தவர். சொந்தமாகத் தறி இருப்பதால் ஆடைகள் குறித்த பரிச்சயம் சிறு வயது முதலே இவருக்கு உண்டு. அப்போதே சிறுசிறு வேலைகளைப் பழகிவந்தார். அதில் வருமானமும் கிடைக்க, வளர்ந்த பிறகு ஆடைத் தொழிலையே தன் அடையாளமாக்கிக்கொண்டார்.

கரோனாவை வென்ற சாதூர்யம்

வத்சலாவின் கணவரும் தறி வைத்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர் அவருக்கு உதவியாக இருந்துவந்த நிலையில், கரோனா தொற்று அவர்களது தொழிலை முடக்கியது.

Loading content, please wait...

X