Last Updated : 28 Jan, 2019 01:02 PM

 

Published : 28 Jan 2019 01:02 PM
Last Updated : 28 Jan 2019 01:02 PM

பேசும் படம்: பெண்ணைப் போற்றும் ஓவியங்கள்

கனடாவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்தீப் ஜோஹல் வடிவியல் ஓவியங்களால் பலரது கவனத்தைத் தன்பக்கம் திருப்பியுள்ளார்.

பெரும்பாலும் கறுப்பு, வெள்ளை நிறங்களைப் பயன்படுத்தி இவர் வரையும் ஓவியங்கள் எளிமையாகவும் ரசிக்கும்வகையிலும் உள்ளன. ஆணாதிக்கம் நிறைந்த இந்தியச் சமூகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த வீரமங்கைகள் குறித்து இவர் வரைந்துள்ள ஓவியங்கள் பலரது பாராட்டையும் பெற்றுள்ளன.

இந்திய விடுதலைக்காகப் போரிட்ட ராணி லட்சுமிபாய், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி, சிவில் உரிமைப் போராளி சோபியா தூலிப் சிங், முதல் பெண் விமானி சரளா, இந்தியாவில் மார்டன் ஆர்ட் ஓவியத்துக்கு வித்திட்ட அம்ரிதா, பெண் குழந்தைக் கடத்தலுக்கு எதிராக 25 ஆண்டுகளாகப் போராடிவரும் ருசிரா குப்தா, இமயமலையில் ஏறிச் சாதனைபடைத்த மாற்றுத்திறனாளி அருணிமா சின்ஹா, அமில வீச்சால் பாதிக்கப்பட்ட ரேஷ்மா குரேஷி உள்ளிட்டோரை  இவர் வரைந்துள்ளார்.

“சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பாலினப் பாகுபாடு, மனித உரிமை ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஓவியக் கலையால் ஏற்படுத்த முடியும்” என்று சொல்லும் ஜோஹலியின் வார்த்தைக்கு அவரின் ஓவியங்கள் வலுச்சேர்க்கின்றன.

5jpg100

6jpg100

7jpg100

8jpg100

9jpg100 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x