Last Updated : 11 Dec, 2018 05:38 PM

 

Published : 11 Dec 2018 05:38 PM
Last Updated : 11 Dec 2018 05:38 PM

இது எந்த நாடு? - 88: உலகிலேயே ஆழமான ரயில் பாதை!

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு. ’எல்லை நாடு’ என்பது இந்த நாட்டுப் பெயரின் பொருள்.

2. இதன் தலைநகரம் கிவ் (Kiev).

3. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலை பெற்றது.

4. க்ரிமியா தீபகற்பம் யாருக்குச் சொந்தம் என்பதில் ரஷ்யாவுக்கும், இந்த நாட்டுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவிவருகின்றன.

5. கரடி, வெள்ளெலி, நரி, காட்டுப் பன்றி போன்றவை இங்கு அதிகம் இருக்கின்றன.

6. நீலப் பட்டையும் மஞ்சள் பட்டையும் கொண்டது இந்த நாட்டுக் கொடி.

7. கால்பந்து பிரபலமான விளையாட்டு. யூரோ 2012 கால்பந்து போட்டிகளை இந்த நாடும் போலந்தும் சேர்ந்து நடத்தின.

8. இரும்பு, நிலக்கரி, எரிவாயு, எண்ணெய், மங்கனீஸ் போன்றவை இங்கு அதிகம் கிடைக்கின்றன.

9. இங்குள்ள ஆர்சேனல்னா ரயில் பாதை உலகின் மிக ஆழமான ரயில்பாதை என்று கருதப்படுகிறது (105.5 மீட்டர் ஆழம்).

10. உலகின் மிக மோசமான அணு விபத்து ஏற்பட்ட செர்னோபில் இந்த நாட்டில் உள்ளது.

விடை: உக்ரைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x