சுற்றுலாப் பரிதாபங்கள்!

சுற்றுலாப் பரிதாபங்கள்!
Updated on
2 min read

கோடை வெயில் தாக்க ஆரம்பிச்சுடுச்சு. டூர் பிளான்கள் ஒவ்வொரு வீட்டிலும் களைக்கட்டத் தொடங்கிடும். ஃபேமிலி டூர், ஃபேக்கேஜ் டூர், காலேஜ் டூர்னு நிறைய வகைகள் இருக்கு. இந்த டூருக்கு நம்ம மக்கள் எப்படியெல்லாம் திட்டமிடுவாங்க? அலப்பறையைக் கூட்டுவாங்க? சும்மா ஜாலியா ஒரு ரவுண்ட் அடிப்போமா?

ஃபேமிலி டூர்

ஃபேமிலி டூர் என்றாலே கோயில் டூராதான் இருக்கும். ‘நீ எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கணும்னு வேண்டிக் கிட்டேன்’னு தொடங்கி விதவிதமா வேண்டுதல்களை தாய்க்குலம் சொல்லுவாங்க. சில வீடுகள்ல ஒரே நாள்ல ஒன்பது கோயிலுக்குக் கூட்டிட்டுப் போவாங்க.

அந்த அளவுக்கு கூகுள் மேப்புல ஆராய்ந்து கோயில்களை ரவுண்ட் அப் அடிக்க தந்தைக்குலமும் உதவுவாங்க. வெயில் காலத்திலும் பக்திமயமாக ரவுண்ட் அடிப்பாங்க.

பொதுவா ஃபேமிலி டூர்னா அந்த வழியில ஓர் அருவி இருக்கு, இங்கே ஒரு டேம் இருக்கு, இங்கே ஒரு பூங்கா இருக்குன்னு கூகுள் மேப்புல கண்டறிஞ்சு, அதையும் குறிச்சுக்கிட்டு ஒரு வேன்ல கிளம்புவாங்க.

குடும்பமா அருவிக்கு முன்னால நின்னு ஒரு போட்டோ, பூங்காவுல படுத்த மாதிரி ஒரு போட்டோ, பூவைப் பிடிச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி ஒரு போட்டோ. இந்த நாலு போட்டோவ எடுக்க 10 ஆயிரம் ரூபா செலவு பண்ணிப் போறதுதான் ஃபேமிலி டூர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in