வைஷாலி எழுப்பிய செஸ் கோட்டை !

வைஷாலி எழுப்பிய செஸ் கோட்டை !
Updated on
2 min read

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் பிரிவில் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீராங்கனையான செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர்.வைஷாலி (24) தேர்வாகி இருக்கிறார். இதற்கு முன்பு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனை கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி மட்டுமே!

சவாலே சமாளி

செஸ் தொடர்களிலேயே மிகவும் சவாலானதாகக் கருதப்படுகிறது, ‘கேண்டிடேட்ஸ்’ தொடர். 2026ஆம் ஆண்டுக்கான தொடர் மேற்காசிய நாடான சைப்ரஸில் நடைபெற்றது. உலக செஸ் சாம்பியனுடன் மோதுவதற்கான வீரர், வீராங்கனையைத் தேர்வுசெய்யும் இத்தொடரில் வைஷாலி வென்றதன் மூலம் நடப்பு செஸ் சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை அவர் எதிர்கொள்வார்.

உலகின் தலைசிறந்த செஸ் வீரர், வீராங்கனைகள் மட்டுமே போட்டியிடும் ‘கேண்டி டேட்ஸ்’ தொடரில் மகுடம் சூடுவது அவ்வளவு எளிதல்ல. ஓபன் பிரிவில் 8 வீரர்கள், மகளிர் பிரிவில் 8 வீராங்கனைகள் மட்டுமே இதற்குத் தேர்வாக முடியும்.

மகளிர் பிரிவில் ஒவ்வொரு வீராங்கனையும் 7 பேரை எதிர்த்துத் தலா இரண்டு முறை விளையாட வேண்டும். எனவே 14 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் 5 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி, 7 போட்டிகளில் டிரா என்கிற கணக்கில் மொத்தம் 8.5 புள்ளிகளோடு வெற்றி வாகை சூடியுள்ளார் வைஷாலி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in