

“பாரதி ஒரு சாதிக்கு ஒரு மதத்துக்கு உரியவன் அல்ல. அவன் சர்வ சமரசவாதி. அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருந்திருக்காது” என்கிற அவரின் வார்த்தைகள் பாரதியின் மீது அவர் வைத்திருக்கும் ஆத்மார்த்தமான பக்தியின் வெளிப்பாடு. கம்பனுக்கு அடுத்தபடியாகக் கவியரசர் தன் மனதில் வைத்துப் போற்றியது மகாகவி பாரதியைத்தான்!
1960இல் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ திரைப்படத்தின் ‘டைட்டில்’ பாடல், படித்தவர், பாமரர் என அனை வருக்கும் உத்வேகம் ஊட்டுவதாக அமைய வேண்டும் என்று அப்படத்தின் நாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விரும்பினார். அதற்கேற்றபடி மிக எளிமையான சொற்களில் கவியரசர் கொடுத்த பாடல்தான், ‘அச்சம் என்பது மடமையடா.’
எம்.ஜி.ஆருக்கு ‘மதுரை வீரனி’ல் ஆரம்பித்து கவியரசர் எழுதிய ’கொள்கைப் பிரகடன’ப் பாடல்களில் முதல் இடம் இந்தப் பாடலுக்குத்தான். பாடலின் முதல் வரியிலேயே பாரதி யின் ‘புதிய ஆத்திசூடி’யின் முதல் சூத்தி ரத்திற்கு ஒற்றை வரியிலே விளக்கம் கொடுத்துவிட்டார் கவியரசர்.
‘அச்சம் தவிர்’ என்று பாரதி சொன்னால் அதை எதற்காகத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பாடலின் தொடக்க வரியில், ‘அது ஒரு மடமை, அதனால் அதைப் புறந்தள்ள வேண்டும்’ என்று வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளுறை உவமமாகச் சொல்லிவிடு கிறார் கவியரசர்.