75 வருடம் கழித்து ஒரு திருட்டு! | சுட்ட கதை 36

75 வருடம் கழித்து ஒரு திருட்டு! | சுட்ட கதை 36
Updated on
2 min read

‘குற்றப் புனைவு' எழுத்தாளர், ‘பல்ப் ஃபிக்‌ஷன்’ எழுத்தாளர் என்று ஐம்பதுகளில் பிரபலமடைந்த அமெரிக்க நாவலாசிரியை பேட்ரீஷியா ஹைஸ்மித்தைத் (Patricia Highsmith) தீவிர இலக்கியவாதிகள் தூற்றிய காலம் ஒன்று இருந்தது. ஆனால், பேட்ரீஷியா குற்றங்களை ஒரு கருவி யாகப் பயன்படுத்தி மனித ஒழுக்கம், தனிமை, சமூகத்தின் மீதான வெறுப்பு மனநிலை ஆகியவற்றைக் கதாபாத்திர ஆழத்துடன் எழுதி பதிலடி கொடுத்தார்.

இதனால் இவருடைய எழுத்து பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பாவில் பெரிதும் மதிக்கப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டது. மொத்தம் 22 நாவல்களை எழுதினார். இவருடைய நாவல்கள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள் எனப் பலவிதப் படைப்பு கள் 23 திரைப்படங்களாக வெளி வந்திருக்கின்றன.

1950இல் வெளி யான இவருடைய ‘ஸ்ட்ரேஞ்சர்ஸ் ஆன் எ ட்ரைன்’ (Strangers on a Train) என்கிற நாவலை, அதே தலைப்பில் 1951இல் படமாக்கி வெளியிட்டார் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக். 75 ஆண்டு களுக்கு முன் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்! நாவலின் மையக் கதையாடலை முடிந்தவரை முழுமையாக எடுத்தாண்டிருந்தார் ஹிட்ச்காக்! நாயகன் கை ஹெய்ன்ஸ் (Guy Haines) ஒருநாள் ரயிலில் பயணிக் கிறான்.

அந்தப் பயணத்தில் அவனைத் தற்செயலாகச் சந்திக்கிறான் ப்ரூனோ ஆண்டனி. ஏற்கெனவே நாம் அறிமுக மானவர்கள்தான் என்று சொல்கிறான். தன்னை அறிந்த ஒரு நபர் வலிய வந்து பேசும்போது மரியாதை கருதி, ‘கை’யும் அவனுடன் பேசுகிறான்.

அந்த உரையாடலில் ப்ரூனோ, ‘கை’யைப் பற்றிய பல அந்தரங்கமான தனிப்பட்ட தகவல்கள் தனக்குத் தெரியும் என்று அவற்றை அவனிடம் சொல்கிறான். இதைக் கேட்டு அதிர்ந்தாலும் பின்னர் சகஜ நிலைக்கு வருகிறான் கை. காரணம், ‘கை’ ஒரு பிரபல டென்னிஸ் வீரன்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in