ததாஸ்து தேவர்கள்

ததாஸ்து தேவர்கள்
Updated on
1 min read

வீடுகளில் நாம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர் நம்மிடம் சொல்லக் கேட்டிருப்போம். நம்மை சுற்றி ததாஸ்து தேவர்கள் இருப்பார்கள். அவர்கள் நாம் சொல்ல கூடிய வார்த்தைகளை, ‘அப்படியே ஆகட்டும்’ என்று நமக்கு அருள் புரிபவர்கள்.

சில சமயங்களில் நாம் சொல்லிய வார்த்தை அப்படியே எதிர்காலங்களில் நடக்கக் கூடியதை நாம் பார்க்க முடியும். வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது.

அதாவது நன்மை, தீமை, சாபம் என்று எதுவாக இருந்தாலும் நம் வார்த்தைகளில் கவனமாக இல்லை என்றால் பிரச்சினையை சந்திக்க வேண்டிய நிலை வந்து விடும். ததாஸ்து தேவர்கள் நமக்கு தீயதை மட்டும் கொடுப்பவர்கள் அல்ல.

நாம் வேண்டிய வரத்தையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நமக்கு வேண்டிய வரத்தை மனதில் நினைத்து ‘ஓம்  அஸ்வினி நமஹ’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்தால், அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ததாஸ்து தேவர்கள்
ஆர்ப்பரிக்கும் திற்பரப்பு அருவி! | சுற்றுலா
Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in