​சாண மாடா? மேய்ச்​சல் மாடா? | மீளுருவாக்க விவசாயம்

​சாண மாடா? மேய்ச்​சல் மாடா? | மீளுருவாக்க விவசாயம்
Updated on
1 min read

இயற்கை விவ​சா​யத்​துக்கு மாடு அவசி​யம் என்​ப​தில் மாற்​றுக் கருத்து இல்​லை. ஆனால், அதைத் தொழு​வத்​தில் அடைத்​து​வைத்​துச் சாணத்​தை​யும் சிறுநீரை​யும் சேகரிக்​கும் “உரம் தயாரிக்​கும் இயந்​திர​மாக” மட்​டுமே பயன்​படுத்​து​வது நம் பாரம்​பரி​யம் அல்ல.

“மாடு மாதிரி நுனிப்​புல் மேயாதே” என்ற பழமொழி​யில் ஓர் ஆழமான அறி​வியல் உள்​ளது. மாடு ஒரு செடி​யின் நுனியை மட்​டும் கடிக்​கும்​போது, அந்​தச் செடி தற்​காப்​பாகக் கசப்​புத் தன்​மையை வெளிப்​படுத்​தும்.

அதனால் மாடு அதை மீண்​டும் கடிக்​காமல் அடுத்த செடிக்கு நகரும். அதே​நேரம், மாட்​டால் கடிக்​கப்​பட்ட அந்தச் செடி, வேர்ச் சுரப்​பிகளை அதி​கள​வில் சுரந்​து, மண்​ணில் உள்ள நுண்​ணு​யிர்​களை அதிவேக​மாகப் பெருக்கி நிலத்​தைச் செழு​மை​யாக்​கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in