Last Updated : 21 Jan, 2023 05:40 PM

1  

Published : 21 Jan 2023 05:40 PM
Last Updated : 21 Jan 2023 05:40 PM

சாலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான 761 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

தகுதியானவர்களை நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்குப் பிப்ரவரி 11ஆம் தேதி வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பத்தை பிப்ரவரி 16ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம்.

தகுதி

இந்த காலிப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ., சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சிவில் பொறியியல் பிரிவில் டிப்ளமோ படிப்பு முடித்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ரூ. 19,500 முதல் ரூ. 71,900 வரை சம்பளம் வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு

அனைத்து எஸ்.சி, எஸ்.டி, பி.சி வகுப்பினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற கணவனை இழந்த பெண்களுக்கும் வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினர் 37 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

மே 7ஆம் தேதி நடைபெற இருக்கும் எழுத்துத் தேர்வுக்கு https://www.tnpsc.gov.in/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்

சென்னை, கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களில் உள்ள தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர் தேர்வு எழுதுவதற்கு இதில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் இரண்டு மையங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலிருந்து ஒன்றில் தேர்வு மையம் ஒதுக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்களைக் கணக்கில் கொண்டு, இட ஒதுக்கீடு விதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதனை அடுத்துத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x