Published : 14 Nov 2019 12:37 pm

Updated : 14 Nov 2019 12:37 pm

 

Published : 14 Nov 2019 12:37 PM
Last Updated : 14 Nov 2019 12:37 PM

வார ராசிபலன் 14-11-2019 முதல் 20-11-2019 வரை (துலாம் முதல் மீனம் வரை)

weekly-atrology

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் மங்களகாரகன் செவ்வாய் ராசியில் சஞ்சரிக்கிறார். சுபகாரியங்களில் தடைகள் அகலும். பணவரவு சீராக இருக்கும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் பாக்கியஸ்தானத்தை அலங்கரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும்.


உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கம் வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சினைகள், வாக்குவாதம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வேலைப்பளு ஏற்படும். அரசியல்வாதிகள் மீது மேலிடத்தின் கவனம் விழும். மாணவர்களுக்கு, விமர்சனங்கள், கிண்டல்களைத் தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றிவரக் கஷ்டங்கள் நீங்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். சூரியன், ராசிக்கு மாறுகிறார். முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலை உயரும். தொழில்ஸ்தானாதிபதி சூரியனே ராசிக்கு வருகை தருவதால் தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் பிரச்சினைகளை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு, சின்ன வேலைக்காகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தோழர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
எண்கள்: 2, 9
பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாற்றி வணங்கி தீபம் ஏற்றி வர சிரமங்கள் தீரும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சனி இருந்தாலும் ராசிநாதன் குருவும் கேதுவும் மாற்றத்தைத் தருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் வாதம் சம்பந்தமான பிரச்சினைகள் தோன்றலாம். புளிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தொழில், வியாபாரம் தொடர்பில் வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேச வேண்டும். உத்தியோகத்தில் நிர்வாகத்தினர் பற்றி யாரிடமும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்குப் படபடப்பைத் தருவதாக இருக்கலாம். பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி, கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3, 6
பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் எதையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். அடுத்தவர் செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். சொந்தக் காரியங்களில் இருந்த தாமதம் அகலும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும். மருந்து, ரசாயனத் தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்படுவது வெற்றியை உண்டாக்கும்.

குடும்பச் செலவை சமாளிக்குமளவுக்கு பணவரவு இருக்கும். மனத்தில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்களுக்கு பிறரது செயல்கள் கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். கலைத் துறையினருக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லதாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு பிரச்சினையை சமாளிக்கும் திறமை கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் போட்டி குறையும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
எண்கள்: 2, 5, 6
பரிகாரம்: பைரவரை வணங்க பிரச்சினைகள் குறையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்துக் கிரகங்களும் அனுகூலமாகச் சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியம் முடியும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழில், வியாபாரத்தில் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளரின் தேவை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். பெண்களுக்கு, அதிகம் பேசுவதைத் தவிர்த்து செயலில் வேகம் காட்டுங்கள். கலைத் துறையினருக்கு அடுத்தவர் கூறுவதை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 2, 6
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத்தட்டுப்பாடு நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் முயற்சிகளில் சாதகமான பலன் இருக்கும். உடல்நலத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதுரியமான பேச்சினால் லாபகரமாகச் செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பு உண்டாகும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.

கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மனதைரியம் உண்டாகும். கலைத் துறையினர் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகள் வீண்வாக்குவாதத்தை விட்டு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். எதிர்பார்ப்புகளைக் குறைத்து இருப்பதை வைத்து முன்னேற முயற்சிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 1, 3
பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

வார ராசிபலன்Weekly Atrologyதுலாம்மீனம்துலாம் முதல் மீனம்

You May Like

More From This Category

More From this Author