Last Updated : 03 Jun, 2023 06:09 AM

 

Published : 03 Jun 2023 06:09 AM
Last Updated : 03 Jun 2023 06:09 AM

ஏன் உடற்பயிற்சி அவசியம்?

என்னுடைய நெருங்கிய தோழி அவர். வயது 40 இருக்கும். உடல் எடை ஒன்றும் அவருக்கு அவ்வளவு அதிகம் கிடையாது. இருந்தாலும், அண்மைக் காலமாக அவருடைய எடை சற்று ஏறுமுகத்தில் இருக்கிறது. திடீரென்று அலைபேசியில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. சிறு உதவி தேவை என்றார். உடல் எடையைக் குறைப்பதற்கு எளிதாகப் பின்பற்றக் கூடிய ஒரு வழிமுறையைப் பரிந்துரைக்க முடியுமா என்று கேட்டார்.

ஒரே ஒரு வழிமுறைதான் இருக்கிறது, நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று மனதுக்குள் உறுதியாக நினையுங்கள் என்று சொன்னேன். ஆம், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நாம் உறுதியாக நினைத்தால், நமது உடல் அதை நோக்கிய பயணத்தைத் தானாகவே தொடங்கிவிடும்.

தூக்கம், பசி, உணவு உள்ளிட்ட நமது வாழ்க்கைமுறையும் அதற்கு ஏற்ப மாறிவிடும். இதன் நீட்சியாக ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்படுவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமான முறையில் குறையும். நமது நோக்கமும் கவனமும் உடல் எடையைக் குறைப்பதில் இருப்பதைவிட, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இருப்பதே நல்லது.

அன்றாடப் பழக்கம்: ஆரோக்கியமாக இருக்க நாம் செய்யக்கூடிய சிறந்த செயல்களில் முக்கியமானது உடற்பயிற்சியே. இந்த உடற்பயிற்சியை எப்போதோ ஒருமுறை செய்வதில் எவ்விதப் பலனும் கிடைக்காது. அதைத் தினசரி செய்ய வேண்டும். வாழ்க்கையின் அன்றாடப் பழக்கமாக மாற்ற வேண்டும். மன உறுதி, ஒழுங்கு, விடாமுயற்சி போன்றவற்றை வளர்த்துக்கொண்டால், உடற்பயிற்சி நமது அன்றாடப் பழக்கமாக எளிதில் கைகூடிவிடும்.

ஏன் செய்ய வேண்டும்? - தினமும் உடற்பயிற்சி செய்வது நமது ஆரோக்கியத்தைக் கணிசமாக மேம்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசி, தூக்கம் ஆகியவற்றைத் தினசரி உடற்பயிற்சி சீர்படுத்தும். இதனால், உடல் எடை ஆரோக்கியமான அளவுக்குக் குறையும்; தசைகள் வலுவடையும்; நாள்பட்ட நோய்களுக்கான ஆபத்து குறையும்.

மேலும், உடற்பயிற்சி நம் மனநிலையைச் செம்மைப்படுத்தும்; மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும்; மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றைக் குறைக்கும்; மன நிம்மதி, மகிழ்ச்சியைப் பெருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் நமது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது உடற்பயிற்சி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x