Published : 22 Sep 2015 01:52 PM
Last Updated : 22 Sep 2015 01:52 PM

இந்தியாவின் சம்பளம்

உலகின் ஆசிய- பசிபிக் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் இந்தியாவில்தான் வேலையில் சேரும்போது ஆரம்பக்கட்ட சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதாக டவர்ஸ் வாட்ஸன் எனும் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

ஆரம்பக்கட்ட சம்பளம் சராசரியாக இந்தியாவில் 400 அமெரிக்க டாலர் (ரூபாய் 24 ஆயிரம்). இது தென்கொரியாவில் வழங்கப்படுவதைவிட ஐந்தில் ஒரு பங்குதான். ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 11 வளர்ந்த பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியாவின் ஆரம்பக் கட்டச் சம்பளத்தின் சராசரியானது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது என்கிறார் இந்த நிறுவனத்தின் அதிகாரியான சம்பவ் ரக்யன்.

அவர் மேலும் கூறும்போது ‘மே இன் இந்தியா’ எனும் பிரச்சாரத்தின் மூலம் இந்தியாவை நோக்கிப் பெரும் நிறுவனங்களை இழுப்பதற்கு இதுவும் பயன்படலாம். சம்பளத்தின் ஏணியில் அனுபவம் பெற்ற மேலாளர்களில் நடுத்தர மேலாளர்களின் சம்பளங்களும் கூட மற்ற ஆசிய- பசிபிக் நாடுகளை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளன. ஒரு பொறியியல் மேலாளர் இந்தியாவில் சீனாவைவிட பாதி அளவு சம்பளத்தையும் சிங்கப்பூரை விட மூன்றில் ஒரு பங்கு அளவு சம்பளத்தையும் பெறுகிறார்.

தகவல்தொழில்நுட்பத்துறையில் நன்கு கால்பதித்துள்ள இந்தியாவுக்கு உற்பத்தித்துறை உள்ளிட்ட வேறுபல துறைகளிலும் முன்னேறுவதற்கு இதுவும் கூட உதவலாம் என்றும் கூறுகிறார் .

- ‘தி இந்து’ ஆங்கிலத்திலிருந்து சுருக்கமாகத் தமிழில்: சாங்கியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x