Last Updated : 14 Apr, 2015 11:27 AM

 

Published : 14 Apr 2015 11:27 AM
Last Updated : 14 Apr 2015 11:27 AM

வேலை வேண்டுமா? - கடற்படையில் கல்வி அதிகாரி ஆகலாம்

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் போர் பிரிவு மட்டுமின்றி பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி, சரக்கு போக்குவரத்து, கால்நடை மருத்துவம் எனப் பல்வேறு இதர பிரிவுகளும் செயல்படுகின்றன.

ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனித் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில், இந்தியக் கடற்படையில் கல்வி அதிகாரி பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள். இது குறுகிய காலப் பணி (Short Service Commission) ஆகும்.

அதாவது 12 ஆண்டுகள் பணியாற்றலாம். கூடுதலாக 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

கல்வி அதிகாரி பணிக்கு எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் எம்.ஏ ஆங்கிலம், வரலாறு பட்டதாரிகள் (ஆண் பெண் இருபாலரும்) விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

வயது 2 1 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். அதாவது, 2.1.1991-க்கும் 1.1.1995-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். பணி தேர்வு வாரியம் (Service Selection Board) மூலமாக 2 கட்டங்களாகத் தேர்வு நடத்தப்படும். முதல் கட்டத்தில் நுண்ணறிவுத்தேர்வும், குழு விவாதமும் 2-ம் கட்டத்தில் உளவியல் தேர்வும், நேர்முகத்தேர்வும் நடைபெறும்.

பணிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு நேரடியாகக் கல்விப்பிரிவில் சப்-லெப்டினென்ட் ஆக நியமிக்கப்படுவார்கள். தொடக்க நிலையிலே சம்பளம் ரூ.74 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும். லெப்டினென்ட், லெப்டினென்ட் கமாண்டர், கமாண்டர், கேப்டன் என அடுத்தடுத்துப் பதவி உயர்வும் பெறலாம். தகுதியும் விருப்பமும் உள்ள எம்எஸ்சி, எம்ஏ பட்டதாரிகள் ஆன்லைனில் ( >www.joinindiannavy.gov.in) விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு அதைப் பிரிண்ட் அவுட் எடுத்துச் சான்றொப்பமிட்ட சான்றிதழ் நகல்களுடன் ”P.B. No. 04, Main Post Office, RK puram, New Delhi 110 066” என்ற முகவரிக்கு மே மாதம் 1-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x