Last Updated : 18 Apr, 2017 10:32 AM

 

Published : 18 Apr 2017 10:32 AM
Last Updated : 18 Apr 2017 10:32 AM

ஆங்கிலம் அறிவோமே - 156: பழமொழிகளை ‘மாற்ற’ முடியாது!

கேட்டாரே ஒரு கேள்வி

பிஞ்சிலே பழுத்தவன் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்?



இளம் வயதிலேயே தனித்துவமான அதீதத் திறமையோடு விளங்குபவரை prodigy என்று குறிப்பிடுவதுண்டு. He was a child prodigy in chess and he soon became the national chess champion.

ஆனால் பிஞ்சில் பழுத்தவன் என்பதைக் கொஞ்சம் எதிர்மறையான அர்த்தத்தில் தான் நாம் பயன்படுத்துகிறோம். அதாவது ‘தேவையில்லாததை எல்லாம் தெரிஞ்சக்கிட்டு இருக்கான்’ என்ற பொருளில். A precocious boy எனும்போது பிஞ்சிலே பழுத்தவன் என்பதை நாம் உணர்த்துகிறோம். அதாவது prematurely developed என்ற பொருளும் இந்த வார்த்தைக்கு உண்டு.



Differently என்பதற்கும், Indifferent என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Difference என்றால் வித்தியாசம். Different என்றால் வித்தியாசமான.

Indifferent என்பதன் பொருள் ஆர்வம் காட்டாத அல்லது கவலைப்படாத. Indifferent person, indifferent organization.

He was indifferent to the proposal since it did not affect him.

தரமற்ற என்ற அர்த்தத்திலும் indifferent பயன்படுத்தப்படுகிறது. Indifferent roads.



“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு” இந்தப் பழமொழியை ஆங்கிலப் பழமொழியாக எப்படி மாற்றுவது?

நண்பரே, பழமொழிகளை ‘மாற்ற’ முடியாது. அப்படி மாற்றினால் அது புது மொழிதான். “You can die at the age of six. Or you can die at the age of 100” என்று மொழிபெயர்த்தால் அது ‘ஆங்கிலப் பழமொழி’யாகிவிடாது.

நண்பர் குறிப்பிட்ட தமிழ்ப் பழமொழியை ‘Death is inevitable. No one is immortal, Death can come at anytime’ என்று மூன்று விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால், ஈடான ஆங்கிலப் பழமொழி உண்டு. Death does not blow a trumpet (அதாவது இறப்பு முன்னறிவிப்பு செய்துவிட்டு வருவதில்லை).

இப்படித்தான் ஆங்கிலத்தில் சில பழமொழிகளும், தமிழில் சில பழமொழிகளும் உள்ளன. அவை இரண்டும் நேரடி மொழி பெயர்ப்புகளாக இருக்காது. ஆனால் அவற்றின் சாரம்சம் அப்படியே இரண்டிலும் இருக்கும். கீழே உள்ள ஆங்கிலப் பழமொழிகளின் அர்த்தத்தை அப்படியே அளிக்கும் தமிழ்ப் பழமொழிகளை எழுதி அனுப்புங்களேன். ஐந்து நாட்களுக்குள் அனுப்புங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டையும் குறிப்பிடுங்கள். நீங்களாகவே ‘பழமொழிகளை’ உருவாக்கக் கூடாது.

1) When the cat is away, the mice will play.

2) A thousand pounds and a bottle of hay are just the same at doomsday.

3) The squeaky wheel gets the grease.

4) No man is an Island.

5) Heaven is the help of helpless.

6) As you sow, so shall you reap.



“So என்றால் எனவே. Because என்றால் ஏனென்றால். எனவே என்றாலும் ஏனென்றால் என்றாலும் ஒரே அர்த்தம்தான். அப்படியானால் She fell ill; so she went to the doctor என்றாலும் She fell ill because she went to the doctor என்றாலும் ஒரே அர்த்தமா?”

இப்படி ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அதெப்படி? அந்த வாக்கியங்களுக்கு ஒரே அர்த்தம் அல்ல. நேரெதிர் அர்த்தம்! உடல் நலமில்லாததால் மருத்துவரிடம் போவதற்கும், மருத்துவரிடம் போனதனாலேயே உடல்நலம் குறைந்ததற்கும் வேறுபாடு இல்லையா?

நண்பரின் தர்க்கத்தில் தவறு இருக்கிறது. So, because ஆகிய வார்த்தைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்ததுதான் அவற்றின் அர்த்தம்! அதாவது cause, effect ஆகிய இரு (முரணான) விதங்களிலும் அவை பயன்படுத்தப்படலாம்.

She fell ill; so she went to the doctor எனும் வாக்கியம் உணர்த்தும் அதே அர்த்தம் because என்பதைப் பயன்படுத்தும்போதும் வர வேண்டுமென்றால் Because she fell ill, she went to the doctor என்றுதான் கூற வேண்டியிருக்கும்!



போட்டியில் கேட்டுவிட்டால்?

Doing the job by hand is very __________ compared with doing it by machine. It wastes lot of time.

a) Efficient

b) Efficiency

c) Inefficient

d) Unefficient

e) Delicate

மேலோட்டமாகப் பார்த்தால் delicate சரியென்று தோன்றுகிறது. அதாவது ஒரு கருவியைக் கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்வதைவிட கையால் அதைச் செய்வது நுட்பமானது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது வாக்கியம் முதல் வாக்கியத்திலுள்ள தகவலை இழிவுபடுத்துகிறது. எனவே மீதி வார்த்தைகளைப் பார்ப்போம்.

கையால் அந்தச் செயலைச் செய்வது திறமையானதாக இருந்தால், அதனால் நேரம் வீணாகாது. எனவே efficient என்பது சரியல்ல.

Doing the job என்று தொடங்கும் இந்த வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் ஒரு noun இடம் பெறாது. எனவே efficiency என்ற சொல் பொருந்தாது.

Unefficient என்று ஒரு வார்த்தையே கிடையாது.

Inefficient என்ற வார்த்தை முழுமையாகப் பொருந்துகிறது. Doing the job by hand is so inefficient compared with doing it by machine. It wastes lot of time.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x