Published : 02 Dec 2013 03:30 PM
Last Updated : 02 Dec 2013 03:30 PM

லதாவின் சாமர்த்தியம் எது?

நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைகிறாள் லதா. உட்காரச் சொன்னவுடன் நாற்காலி நுனியில் உட்காருகிறாள்.

தேர்வாளர் 1 லதா ரொம்ப நல்ல பெயர். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்?

லதா (கொஞ்சம் திகைத்துவிட்டு பிறகு பதில் சொல்கிறாள்).

என் அம்மாவுக்கு லதா மங்கேஷ்கர் குரல்னா ரொம்ப இஷ்டம். அதனாலே எனக்கும் அந்தப் பெயரை வச்சாங்க.

தேர்வாளர் 2 ஒரு வேளை நீங்க ஆணா பிறந்திருந்தாலும் லதான்னுதான் பேர் வச்சிருப்பாங்களா? (உரத்துச் சிரிக்கிறார்).

லதா (புன்னகைத்தபடி) - எங்க அம்மாவுக்கு முகேஷ் குரலும் ரொம்பப் பிடிக்கும் சார்.

தேர்வாளர் 1 உங்களுக்கு மிகவும் பிடித்த இசைக்கருவி மிருதங்கம்னு, உங்க சி.வி.யிலே குறிப்பிட்டிருக்கீங்க. மிருதங்கம் வாசிக்கத் தெரியுமா?

தேர்வாளர் 2 மிருதங்கம் ஆண்களுக்கான வாத்தியம் இல்லையா?

லதா - அப்படி எல்லாம் வேறுபாடு இருக்கா சார்? நாகஸ்வரத்தைக்கூட ஆண்கள்தான் பொதுவாக வாசிப்பாங்க. ஆனா பொன்னுத்தாயிகூட நாகஸ்வர வித்வான்தானே?

தேர்வாளர் 1 மிருதங்க வித்வான்கள் இரண்டு பேரின் பெயரைச் சொல்லுங்க.

லதா - உமையாள்புரம் சிவராமன். அவர் கச்சேரியை என் அப்பா மிகவும் பாராட்டுவார். எ ங்கே போனாலும் அவருக்கு ஏதாவது இசையை கேட்டுக்கொண்டே இருக்கணும் சார்.

தேர்வாளர் 2 வேலை பார்க்கும் இடங்களில் சேனல் மியூசிக் அவசியமா?

லதா நல்லதுதான். டென்ஷன் குறைந்து வேலையை இன்னும் திருப்திகரமாக ச் செய்ய முடியும். யார் மீதாவது கோபம் வந்தால் அது அடங்கி, சக ஊழியர்களிடம் நல்லுறவு வலுப்படும் (இப்போது லதா நாற்காலியில் வசதியாக பின்புறம் சாய்ந்து உட்கார்ந்து கொள்கிறாள்).

தேர்வாளர் 1 சிவகாசியில் குழந்தைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை ஏன் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை?

லதா குடும்ப வறுமைதான் முக்கிய காரணம் சார். பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களுக்குத்தான் அதிகாரிகள் விசிட் செய்வார்கள். இதனால் மூலப்பொருள்களை தொழிலாளர்களின் வீடுகளுக் கே கொடுத்து அனுப்பிடறாங்க. குழந்தைகளும் அவங்க அவங்க வீட்டிலேயே பட்டாசு தயார் செய்யறாங்க.

(பேட்டி தொடர்கிறது)

ஆலோசனைகள்

லதா சாமர்த்தியசாலிதான். லதா என்ற பெயரின் காரணத்தைக் கேட்டபோது (மலர்கொடி என்பது அதன் அர்த்தம்) அதற்குப் பதில் தெரியவில்லை என்றாலும், வேறு ஏதோ கூறி திசைதிருப்பி விடுகிறாள். அதேபோல தேர்வாளர் இரண்டு மிருதங்க வித்வான்களின் பெயர்களைக் கூறச் சொல்கிறார். ஆனால், அவள் தனக்குத் தெரிந்த ஒருவரின் பெயரைச் சொல்லிவிட்டு அதோடு நிறுத்திக்கொள் ளாமல் (நிறுத்திக் கொண்டிருந்தால், அவளுக்கு வேறு எந்த மிருதங்க வித்வானின் பெயரும் தெரியாது என்ற உண்மை வெளிப்பட்டிருக்கும்) பேச்சை வேறு மாதிரித் தொடர்கிறாள். இந்த இரண்டு இடங்களிலுமே தேர்வாளர்கள் லதாவின் பதிலின்மையை உணரத் தவறி விடுகிறார்கள்.

இருக்கையில் உட்காரும்போது முதலிலேயே வசதியாக உட்கார்ந்து கொள்வது நல்லது. வசதி குறைவான உட்காரும் நிலை காரணமாகக்கூட, பதில்களைத் தெளிவாக சொல்ல முடியாமல் போகலாம்.

தன்விவரக் குறிப்பில் வித்தியாசமான ஏதாவது தகவல் இருந்தால், அது குறித்து தேர்வாளர்கள் கேள்வி கேட்க நிறைய வாய்ப்பு உண்டு (எவ்வளவு பொதுவான கேள்விகளைத்தான் அவர்கள் அத்தனை பேரிடமும் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?). அந்த வகையில் மிருதங்கம் குறித்து லதா எழுதி இருப்பதைக் கொண்டு பேட்டி தொடங்குகிறது.

இப்படி வித்தியாசமான ஆற்றல், ஈடுபாடு உங்களுக்கு இருப்பதாக தன்விவரக் குறிப்பில் குறிப்பிட்டிருந் தால், அது தொடர்பாக நன்றாகத் தெரிந்துகொண்டு நேர்முகத் தேர்வை அணுகுங்கள். சொல்லப்போனால் இப்படி நன்றாகத் தெரிந்த விஷ யங்களை, உங்கள் சி.வி.யில் ஒரு தூண்டில் புழுவாகப் பயன்படுத்தி தேர்வாளரைக் கேள்வி கேட்க வைக்க லாம். சிறப்பாக பதில் அளிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x