Published : 16 Jan 2017 05:15 PM
Last Updated : 16 Jan 2017 05:15 PM

வேலை வேண்டுமா? - தேசிய அனல்மின் கழகத்தில் வேலை

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல்மின் கழகத்தில் (National Thermal Power Corporation-NTPC)120 பயிற்சி இன்ஜினியர்கள் (Engineering Executive Trainees) நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.

இப்பணிக்கு பி.இ., பி.டெக். அல்லது ஏ.எம்.ஐ.இ. பட்டதாரிகள் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன்) விண்ணப்பிக்கலாம். பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எனினும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் எனில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் போதுமானது. வயது வரம்பு 27. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் 2017 கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் நுண்ணறிவுத் தேர்வு (Aptitude Test), குழு விவாதம், நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மெரிட் பட்டியல் தயாரிப்பில் கேட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 85 சதவீதமும், குழு விவாதத்துக்கு 5 சதவீதமும், நேர்முகத் தேர்வுக்கு 10 சதவீதமும் வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.

பயிற்சி இன்ஜினியர் பணிக்கு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் ( >www.ntpccareers.net) விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை என்.டி.பி.சி. இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x