Published : 30 Nov 2013 11:59 AM
Last Updated : 30 Nov 2013 11:59 AM

வார இறுதி நாட்களில் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பு

சென்னை சங்கர நேத்ராலயாவின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு அங்கமான தி சங்கர நேத்ராலயா அகாதெமி மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பினை ( சர்ட்டிபிகேட் கோர்ஸ் இன் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் ) தொடர்ந்து வழங்கி வருகிறது.

இந்த படிப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை ஊழியர்களின் வசதியை கருத்திற்கொண்டு 12 வார இறுதி நாட்களை பயிற்சிக்காலமாக (சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை) அமைத்து வகுப்புகளாக வழங்குகிறது.

இந்த படிப்பில் கீழ்க்கண்ட சிறப்பு வகுப்புகள் அமைந்துள்ளன; கம்யூனிகேஷன் திறன், சுகாதார சேவையில் மனித வள மேலாண்மை, மருத்துவமனைகளுக்கான தர அங்கீகார முறைகள், தொடர் விநியோக மேலாண்மை எனப்படும் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், சுகாதாரத் துறையில் தகவல் தொடர்பு வசதிகள், சுகாதார பாதுகாப்பு சட்டங்கள்,ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் க்ளெய்ம் மேனேஜ்மெண்ட், முழுத்தர நிர்வாகம், பயிற்சி மற்றும் வளர்ச்சி தேவைகள், நிதி நிர்வாகம் மற்றும் மருத்துவமனை விஜயம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த படிப்பு அமைந்துள்ளது.நிச்சயமாக அவர்கள் நன்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் மத்திய நிலை மற்றும் மூத்த மேலாளர்கள் நிர்வாக சிக்கல்கள் மற்றும் கருத்துக்கள் ஒட்டுமொத்த புரிந்து அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பு மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் இள நிலை மற்றும் மத்திய நிலை அலுவலர்களின் திறமையை குறிப்பாக நிர்வாக சிக்கல்கள் மற்றும் மேலாண்மை கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தி சங்கர நேத்ராலயா அகாதெமியின் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பின் வகுப்புகள் ஜனவரி 18, 2014 (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

பயிற்சிக்கு பதிவு படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க கடைசி நாள் : டிசம்பர் 15,2013.

பயிற்சி நடைபெறும் இடம்:

சங்கர நேத்ராலயா முதன்மை வளாகம்

எண்: 18 கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 006.

மேலும் விவரங்களுக்கு;

தொலைபேசி எண் : 97104 85295

வலைத்தளம்: www.thesnacademy.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x