Last Updated : 20 Nov, 2018 10:12 AM

 

Published : 20 Nov 2018 10:12 AM
Last Updated : 20 Nov 2018 10:12 AM

வெளிநாட்டில் படிக்கப் போறீங்களா?

வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க இந்தியர் களுக்கு எப்போதும் ஆர்வம் கொஞ்சம் அதிகம்தான். ஆனால், எந்தெந்த நாடுகளில் என்னென்ன படிப்புக்கு கல்வி உதவித் தொகை திட்டங்கள் உள்ளன என்பதைப் பலரும் அறிந்து கொள்வதில்லை. சில நாடுகளில் வெளி நாட்டினருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுவண்டு.

பிரிட்டன் (BRITISH CHEVENING SCHOLARSHIPS): பிரிட்டனில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை இது. இந்த உதவித்தொகை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சாராத, மற்ற நாட்டினருக்கு வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு: www.chevening.org

பிரிட்டன் (COMMONWEALTH SCHOLARSHIPS): இது பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வித் திட்டம். காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக உள்ள இந்தியா உள்பட 53 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற தகுதியானவர்கள்.  படிப்பு கட்டணம், தினசரி செலவினங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டணம், கல்வி ஆதாரங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட முக்கிய கட்டணங்கள் இந்த உதவித் தொகையில் அடங்கும்.

விவரங்களுக்கு: http://cscuk.dfid.gov.uk/apply/

அமெரிக்கா (USA FULBRIGHT SCHOLARSHIPS): மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக, அமெரிக்க அரசு வழங்கும் உதவித்தொகை இது. படிக்கும் காலத்தில், ஒரு மாணவருக்கு ஆகும் செலவினங்களுக்கு இந்த உதவித்தொகை நிச்சயம் உதவியாக இருக்கும்.

விபரங்களுக்கு: www.iie.org/en/Fulbright

அமெரிக்கா (ROTARY FOUNDATIONS AMBASSA-DORIAL SCHOLARSHIPS): தனியார் பங்களிப்பு மூலம் இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித் தொகை திட்டங்களுள் ஒன்று.

ஆஸ்திரேலியா (AUSTRALIA AWARDS SCHOLARSHIPS): திறமையும் தகுதியும் வாய்ந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் கல்வி  உதவித்தொகை வழங்கப் படுகிறது. நல்ல மதிப்பெண்களுடன் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்கள், இந்த உதவித் தொகையைப் பெற தகுதியானவர்கள்.

விபரங்களுக்கு www.australiaawards.gov.au

இவை மட்டுமல்ல, பிற ஐரோப்பிய நாடுகளிலும்கூட வெளிநாட்டு மாணவர்கள் கல்வி உதவித் தொகையுடன் படிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x