Published : 07 Aug 2018 10:26 AM
Last Updated : 07 Aug 2018 10:26 AM
இந்தியன் வங்கியில் அதிகாரிகள் பதவிக்கான (Probationary Officer) காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிக்கையை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும் உரிய தகுதியும் கொண்டவர்கள் ஆகஸ்ட் 27-ம் தேதிவரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தக் காலிப் பணியிடங்கள்: 417
வயது: குறைந்தபட்ச வயது 20, உச்சபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் சலுகை உண்டு.
கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி. / எஸ்.டி. / மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிற பிரிவினருக்கு ரூ. 600. கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்திய நகரங்கள் பலவற்றில் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட தமிழக நகரங்களிலும் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் www.indianbank.in என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய நாள்கள்
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 27.08.2018
ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நாள்: 06.10.2018
ஆன்லைன் முதன்மைத் தேர்வு நாள்: 04.11.2018
கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/X9MuuR
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT