Published : 08 May 2018 10:46 AM
Last Updated : 08 May 2018 10:46 AM

வேலை வேண்டுமா? - 454 டாக்டர்களுக்கு மத்திய அரசுப் பணி

த்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2018-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வின் மூலம் மருத்துவத் துறையில் நிரப்பப்பட உள்ள மொத்த இடங்கள் 454.

வயதுத் தகுதி: 2018 ஆகஸ்ட் 1 அன்று 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது, 1986 ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு முன்னர் பிறந்தவராக இருக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் உள்ளன.

கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதித் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிறருக்குக் கட்டணம் ரூ. 200. ஆன்லைன் மூலமாகச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்னும் இணையதளத்தில் 02.05.2018 முதல் 25.05.2018 மாலை 6:00 மணிவரை விண்ணப்பிக்கலாம்.

இறுதி நாள்: 25.05.2018 மாலை ஆறு மணி.

எழுத்துத் தேர்வு: 22.07.2018

கூடுதல் விவரங்களுக்கு:http://www.upsc.gov.in/sites/default/files/Notification-CMSE-2018-Engl.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x