Last Updated : 06 Feb, 2018 12:00 PM

 

Published : 06 Feb 2018 12:00 PM
Last Updated : 06 Feb 2018 12:00 PM

பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரா? - சொந்தமாக எழுதினால் உயரலாம்!

ஆங்கிலத்தின் பாடத்திட்டம், மதிப்பீட்டு முறை ஆகிய இரண்டும் மற்ற மொழிப் பாடங்களோடு ஒப்பிடுகையில் மாறுபட்டவை. Vocabulary, Grammar, Reading and Writing Skills ஆகியவையே ஆங்கிலப் பாடத்தில் முதன்மையாகச் சோதிக்கப்படுகின்றன. எனவே, தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இவற்றை மையமாகக் கொண்டு தங்கள் தயாரிப்புகளைத் தொடருவது அதிக மதிப்பெண்ணுக்கு வழிசெய்யும்.

தவறுகளைத் தவிர்க்க

முழு மதிப்பெண்கள் பெற Synonyms and Antonyms பகுதிப் (கேள்வி எண் 1-10) பாடங்களின் பின்னுள்ள Glossary-யில் போதுமான திருப்புதல் மேற்கொள்வது அவசியம். பொதுவாக, இந்தப் பகுதியில்தான் கவனக் குறைவால் தவறு நிகழ்ந்துவிடும். சுமாராகப் பயிலும் மாணவர்கள், Lexical Items (கே.எண் 11-23) பகுதியில் விடைகளை முழு வாக்கியங்களாக எழுதுவதில்லை. 2 மதிப்பெண்ணையும் முழுமையாகப் பெற வாக்கியங்களை முழுமையாக எழுத வேண்டும். அடுத்துவரும் Grammatical Competencies பகுதிக்குப் (கே.எண் 24-38) பாடநூலின் பயிற்சி வினாக்களில் எழுதிப் பார்த்துத் திருப்புதல் மேற்கொண்டாலே 20 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.

அதிக மதிப்பெண்களுக்கு

ஆங்கிலம் முதல் தாளின் அதிகபட்ச மதிப்பெண்களை Poetry பகுதியின் ERC தொடர்பான 20 மதிப்பெண்களே பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. Essay and Paragraph பகுதியில், அனைத்து வினாக்களுக்கும் சரியாக விடையளித்தாலும் முழு மதிப்பெண் பெறுவது சவால்தான். சீரான நடையில் எழுதுவது, போதிய எழுத்துப் பயிற்சி, அவசரமின்றிக் கவனத்துடன் எழுதுவது போன்றவற்றின் மூலம் கட்டுரைப் பகுதியில் மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.

மனப்பாடம் செய்வதில் ஆங்கிலப் பாடம் பிற பாடங்களில் இருந்து வேறுபடுகிறது. முழு மதிப்பெண்ணை இலக்காகக் கொண்டவர்கள் அப்படியே மனப்பாடம் செய்யாமல், சொந்தமாக எழுதப் பயிற்சி பெற்றிருப்பதும் அவசியம். வெறுமனே மனப்பாடம் செய்ததை அப்படியே எழுதுவோர் பத்துக்கு 7 மதிப்பெண்ணே பெறுகிறார்கள். ஆங்காங்கே சொந்த நடை, மேற்கோள்கள், சுயமான வார்த்தைப் பிரயோகங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே ஆசிரியர் மூலமாகச் சரிபார்த்த பிறகு படிப்பதும், திருப்புதல் மேற்கொள்வதும் அவசியம். முக்கியக் குறிப்புகளைக் கறுப்பு நிற மையால் வேறுபடுத்திக் காட்டலாம். இந்த வகையில் இரண்டு தாள்களிலும் சேர்த்து essay, paragraph வினாக்களுக்கான 40 மதிப்பெண்களில் அதிகபட்சமாக 37 பெறலாம்.

இரண்டாம் தாளில் General Essay பகுதியில் தகவல்களை முறைப்படுத்தி Title, Subtitle, Quotations ஆகியவற்றை உள்ளடக்கி எழுதினால் முழு மதிப்பெண் பெறலாம். Science and Technology, Society, Environment, Ambitions, Hobby போன்ற தலைப்புகளில் அடிக்கடி வினாக்கள் கேட்கப்படுகின்றன. Errors Spotting (கே.எண் 18-22) பகுதியில் முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்களில் பயிற்சி, திருப்புதல் மேற்கொண்டாலே முழுமையாக விடையளிக்க முடியும். மெல்லக் கற்போரும் இந்த வகையில் 5-ல் குறைந்தது 3 மதிப்பெண் பெறலாம்.

தேர்வறைக் குறிப்புகள்

முதல் வரியின் கடைசி வார்த்தையை உடைத்து, அடுத்த வரியின் தொடக்கமாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு பக்கத்தின் இறுதியில் ஒரு சில வரிகளுக்கு மட்டுமே இடமிருப்பின், அதிக இடம் தேவைப்படும் மற்றொரு வினாவுக்கான விடையை அடுத்த பக்கத்தில் தொடங்குவதும், காலியாக விட்ட வெற்றிடத்தை மறக்காது பென்சிலால் குறுக்காகக் கோடிட்டு அடித்துவிடுவதும் முக்கியம்.

தேர்வின் இறுதியில் நேரம் ஒதுக்கி, விடைக்கு உரிய சரியான கேள்வி எண்ணை எழுதியுள்ளோமா, தேவையான எண்ணிக்கையில் விடை அளித்திருக்கிறோமா என்பனவற்றை உறுதி செய்தல் அவசியம். இயன்ற வரையில் தெளிவாகவும் அடித்தல், திருத்தல் இன்றியும் விடைகளை எழுதுவதும் அவசியம்.

கூடுதலான தேர்வுக் குறிப்புகளுக்கு, ஆங்கிலம் முதல் தாள்: https://tinyurl.com/yaaqzcqh , ஆங்கிலம் இரண்டாம் தாள்: https://tinyurl.com/y7vouc78

தேர்ச்சி எளிது: முதல் தாள்

1. கே.எண் 11-23: Lexical Items பகுதியில், 12, 17, 22 கடினம் என்பதால் அவற்றைச் சாய்ஸில் விட்டுவிட்டு மற்றவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.

2. கே.எண் 24-33: 1 மதிப்பெண் இலக்கணப் பகுதிக்கு, பாடப்பகுதி பயிற்சி வினாக்களைப் படிப்பதுடன் அதில் உரிய திருப்புதல்களைச் செய்தாலே 10-ல் குறைந்தது 7 மதிப்பெண் உறுதி.

3. கே.எண் 34-38: இலக்கணப் பகுதி 2 மதிப்பெண்கள் கேள்விகளில் Rewrite the sentences with starters given in brackets 10-க்கு 4 முதல் 6 மதிப்பெண் எளிதில் பெறலாம்.

4. கே.எண் 39-48: reading comprehension பகுதிக்கு விடையளிக்கையில் 3 முறையேனும் கொடுக்கப்பட்ட பத்தியையும் கேள்விகளையும் நன்றாக வாசித்து அவற்றை உள்வாங்கிப் பதில் அளிப்பதன் மூலம் 15-க்கு 11 மதிப்பெண் சுலபமாகப் பெறலாம்.

5. தலா 6 பாடங்கள் அடங்கிய Prose, Poetry பகுதிகளின், முதல் 2 பாடங்களையும் படித்தாலே கேட்கப்பட்ட Essay, paragraph வினாக்களுக்குச் சுலபமாக விடையளிக்கலாம்.

6. Poetry பகுதியில் மிச்சமிருக்கும் 15 மதிப்பெண்களில் 3 மதிப்பெண்களை Figure of Speech பகுதிக்கான கே.எண்: 61-63 ஆகியவற்றில் பெற்றுவிடலாம்

தேர்ச்சி எளிது: இரண்டாம் தாள்

1. கே.எண் 1-6: துணைப்பாடப் பகுதி: கதையின் பொருள், கதை மாந்தர்கள் தெரிந்திருப்பின் 10 மதிப்பெண்கள்வரை பெறலாம். இதில் முதல் கேள்விக்கு, முதல் மற்றும் கடைசி வாக்கியங்களை அப்படியே எழுதிவிட்டு, புரிந்துகொண்ட கதையோட்டத்தின் மூலம் இடைப்பட்ட 4 வாக்கியங்களைச் சரியாக எழுதிவிட முடியும்.

2. கே.எண் 7-11: Known Passage பகுதி எளிமையான பகுதி என்பதால் அனைவரும் இதில் முழு மதிப்பெண்களைப் பெறலாம்.

3. கே.எண் 12: துணைப்பாடக் கட்டுரையின் Essay பகுதியில், வினாத்தாளில் கொடுக்கப்பட்ட குறிப்புகளைச் சற்று விரிவாக எடுத்து எழுதினாலே 4 அல்லது 5 மதிப்பெண்களைப் பெறலாம்.

4. கே.எண் 13-17: Study skills என்ற தலைப்பின் கீழ் வருகின்ற Library, Internet, E-mail, Dictionary தொடர்பான கேள்விகளுக்குப் பாடங்களின் பிற்பகுதி பயிற்சிகளில் இருந்தே தயார் செய்து, 10-ல் குறைந்தது 4 மதிப்பெண்களைப் பெறலாம்.

5. கே.எண் 23: Summary பகுதியில் கொடுத்துள்ள பத்தியை 3-ல் 1 பங்காகச் சுருக்கி, Rough Copy, Fair Copy, பொருத்தமான Title ஆகியவற்றை எழுதுவதன் மூலம் மட்டுமே 4 மதிப்பெண்களைப் பெறலாம்.

2CH_RajasekaranExamதேர்வுக் குறிப்புகளை வழங்கியவர் இரா.இராஜசேகரன், ஆங்கில முதுகலை ஆசிரியர், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கரூர் மாவட்டம்.right

6. கே.எண் 24: Wanted Column பகுதிக்கான உட்கூறுகளை முறையாக எழுதினால்போதும். இதில் Address on the cover எழுத மறந்து ஒரு மதிப்பெண்ணை இழக்கும் மாணவர்களின் கவனக் குறைவு தவிர்க்கப்பட வேண்டும்.

7. கே.எண் 25: Non-Lexial Filler பகுதியில் ‘er, mm, hmm’ ஆகிய 3-ல் குறைந்தது இரண்டை எழுதி எளிதில் 2 மதிப்பெண்களைப் பெறலாம்.

8. கே.எண் 26: Road Map பகுதியில் Go Straight, Turn Right / Left, You will find ---- ஆகிய 3 வாக்கியங்களை உபயோகிக்கத் தெரிந்திருந்தால் 3 மதிப்பெண்கள் பெற்றுவிடலாம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x