Published : 07 Jul 2014 03:35 PM
Last Updated : 07 Jul 2014 03:35 PM

பொருள் அறிந்து பேசுங்கள்

நீங்கள் உங்கள் உறவினருடன் தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். சற்றுத் தொலைவில் இருக்கும் ஒருவரைச் சுட்டிக்காட்டி ‘அவர் எ ன்னுடைய ஃபார்மர் ஃ ப்ரெண்ட்’ என்கிறார் உறவினர்.

விவசாய நண்பரா? அல்லது முன்பு நண்பராக இருந்து இப்போது சிநேகம் துண்டிக்கப்பட்டவரா?

எதுவாகவும் இருக்கலாம். அவரிடம் விளக்கம் கேட்கலாம். அல்லது அவர் கூறிய வாக்கியத்தை எழுதச் சொன்னால் தெரிந்துவிடும்.

Farmer என்றால் விவசாயி. Former என்றால் முன்னாள் என்று பொருள். Former Principal, Former Student என்றெல்லாம் குறிப்பிடுவது இப்படித்தான்.

Former என்பதை வேறொரு விதத்திலும் பயன்படுத்தலாம். முன்னதாகப் பயன்படுத்தப்பட்டதைத் குறிக்கவும் இந்த வார்த்தையை உபயோகிப்பதுண்டு.

Between coffee and tea, I prefer the former. இந்த வாக்கியத்தில் காபி, டீ ஆகிய இரண்டு பானங்கள் உள்ளன. இவற்றில் former பானத்தைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் முதலில் குறிப்பிடப்பட்ட பானத்தைத்தான் (அதாவது காபியைத்தான்) நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.

Between the carpenter and the farmer, I like the former என்றால் நான் யாரை விரும்புகிறேன் என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இப்போது Later, Latter ஆகிய வார்த்தைகளுக்கிடையே வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

I will meet you later என்றால் பிறகு சந்திக்கிறேன் என்று பொருள். அப்புறம் பார்க்கலாம் என்பதை See you later என்று கூறுவது வழக்கம்.

Latter என்றால் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டது என்று அர்த்தம். அதாவது Former என்பதற்கு எதிர்ச்சொல்லாக இதைக் கருதலாம்.

பழைய வாக்கியத்தையே எடுத்துக் கொள்வோம். Between coffee and tea, I prefer the latter என்றால் இந்த இரு பானங்களில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட டீயைத்தான் நான் அதிகம் விரும்புகிறேன் என்ற அர்த்தம்.

இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.

இரண்டுக்குப் பதிலாக மூன்று பொருள்கள் குறிப்பிடப்பட்டிருந்தால்? எடுத்துக் காட்டாக மேற்படி வாக்கியத்தில் காபி, டீ, குளிர்பானம் என்று குறிப்பிட்டிருந்தால்? காபி என்பது former என்பதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்காது. ஆனால் latter என்று குறிப்பிட்டால் அது குளிர்பானத்தை மட்டும் குறிக்குமா? அல்லது டீ, குளிர்பானம் இரண்டையுமே குறிக்குமா? அல்லது டீயைத்தான் குறிக்குமா?

இர ண்டுக்கு மேற்பட்ட பொருள்கள் வாக்கியத்தில் இருந்தால் latter என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது.

‘காபி, டீ, குளிர் பானம்’ என்று இருப்பதாக வைத்துக் கொள் வோம். உங்கள் விருப்ப பானம் காப்பி என்றால், ‘I prefer the first’ என்றும், உங்கள் விருப்ப பானம் டீ என்றால் ‘I prefer the second’ என்றும், உங்கள் விருப்ப பானம் குளிர்பானம் என்றால் ‘I prefer the last’ என்றும் கூற வேண்டும்.

இதில் இன்னொரு வேறுபாட்டையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ‘Between coffee and tea’ என்று தொடங்கலாம். ஆனால் ‘Between, coffee, tea and soft drinks’ என்று வாக்கியத்தை த் தொடங்கக் கூடாது. ஏனென்றால் இரண்டு என்ற எண்ணிக்கையில் அடங்கும் நபர் அல்லது பொருட்கள் இருக்கும்போதுதான் between என்ற வார்த் தையைப் பயன்படுத்த வேண்டும். அதற்குமேல் என்றால் among என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

கீழே உள்ள வாக்கியங்களைப் படித்து மேலும் தெளிவு பெறலாம்.

Divide the mangoes between Bharat and Murthy.

Divide the mangoes among Bharat, Murthy and Bhaskar.

COMPLIMENTARY - COMPLEMENTARY

Complimentary என்ற வார்த்தைக்கு அர்த்தம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இலவசமாக என்று அதற்குப் பொருள் சொல்லலாம். ‘ தீபாவளிக்கு Compliment எதுவும் இல்லையா?’ என்று அசட்டுச் சிரிப்போடு சிலர் கேட்பது இந்த அர்த்தத்தில்தான். திரையரங்கின் சொந்தக்காரர் உங்களுக்குத் தெரிந்தவர் என்றால் ‘Complimentary pass’ கி டைக்குமா? என்று நீங்கள் கேட்பதும் இந்த அர்த்தத்தில்தான்.

ஆனால் ‘Complimentary words’ என்றால் இலவசமாக உதிர்க்கும் வார்த்தைகள் என்று அர்த்தமல்ல. பாராட்டும்படியான வார்த்தைகள் என்றுதான் அதற்கு அர்த்தம். He paid compliments என்பது இந்தப் பொருளில்தான்.

Complementary என்று இன்னொரு வார்த்தை உண்டு (‘i’ என்ற எழுத்துக்குப் பதிலாக ‘e’ உட்கார்ந்திருப்பதைக் கவனித்தீர்களா?) இதன் பொருள் உதவுதல் அல்லது முழுமையடைய வைத்தல் என்பதாகும். அதாவது வேறொன்றுடன் இணைந்து அதன் நோக்கத்தை முழுமையாக்குவது அல்லது மேம்படுத்துவது என்று சொல்லாம்.

‘Mouse is a complementary tool of computer’, ‘Chalk piece is a complementary item of blackboard’’ என்பதுபோல் கூறலாம்.

Complementary என்பதை வேறாரு விதத்திலும் பயன்படுத்துகிறார்கள். மாற்று மருத்துவம் என்பதை complementary medicine என்கிறார்கள் (அதற்காக complementary என்ற தனி வார்த்தைக்கு மாற்று என்று பொருள் கொள்ளக் கூடாது. ‘பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் முக்கிய வகை மருத்துவத்துக்கு உதவும் வகையில் அமைந்த’ என்று பொருள் கொள்ளலாம்).

complementary என்ற வார்த்தைக்குச் சமமான வார்த்தைகளாக compatible, harmonious, inter-dependent ஆகியவற்றைக் கூறலாம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x