“எங்களது வெற்றியைப் பறித்த அந்த 2 ஓவர்கள்” - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

“எங்களது வெற்றியைப் பறித்த அந்த 2 ஓவர்கள்” - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
Updated on
2 min read

ஹைத​ரா​பாத்: சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்கெதிரான போட்​டி​யில் 11,12-வது ஓவர்​கள் எங்​களது வெற்​றியைப் பறித்தன என்று சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி​யின்​ (சிஎஸ்கே) கேப்​டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்​தார்.

ஹைத​ரா​பாத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஐபிஎல் லீக் ஆட்​டத்​தில் ஹைத​ரா​பாத் அணி 10 ரன்​கள் வித்தியாசத்​தில் சிஎஸ்கே அணியை வென்​றது. இந்த ஆட்டத்​தில் தோல்வி குறித்து சிஎஸ்கே அணி​யின் கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் கூறிய​தாவது: சன்​ரைசர்ஸ் ஹைதராபாத்​தின் பவர்​பிளே சென்ற விதத்​தைப் பார்க்​கும்​போது, 220 முதல் 230 ரன்​களை எட்​டு​வார்​கள் என்று எதிர்​பார்த்​தேன்.

ஆனால், அவர்​கள் அந்த ரன்​களை எடுக்க விடா​மல் 30 ரன்களைக் குறைத்​தது ஒரு சிறந்த பந்​து​வீச்சு முயற்சியாகும். இது​போன்ற ஆடு​களங்​களில் 200 ரன்களுக்கும் குறை​வான இலக்கு இருக்​கும்​போது அதை எட்ட முடி​யும் என்று நினைத்​தேன். கடைசி 10 ஓவர்​களில் எங்​களுக்கு சுமார் 84 ரன்​கள் மட்​டுமே தேவைப்​பட்​டன. ஆனால், அதற்​குப் பிறகு வீசப்​பட்ட ஓரிரு ஓவர்​கள் ஆட்டத்தின் போக்​கையே மாற்​றி​விட்​டன. 10 ஓவர்​கள் முடிந்த பிறகு, அடுத்த 2 ஓவர்​களில் நாங்​கள் வெறும் 4 ரன்கள் மட்​டுமே எடுத்​தோம்.

11-வது ஓவரை இஷான் மலிங்கா வீசி​னார். இந்த ஓவரில் 1 ரன் மட்​டுமே வந்​தது. மேலும், சர்ப்​ராஸ் கான் விக்​கெட் வீழ்ந்​தது. அடுத்த ஓவரை வீச வந்த ஷிவாங் குமார் 3 ரன்கள் விட்​டுக்​கொடுத்து டெவால்டு பிரே​விஸை வீழ்த்தினார். இந்த இரண்டு ஓவர்​கள் சிஎஸ்​கே-வுக்கு பின்னடை​வாக அமைந்​தது. அதுவே எங்​களது வெற்றியைப் பறித்​தது.

எனவே, இந்த 2 ஓவர்​கள் அவர்​களுக்கு மிக​வும் உதவியது என்று நினைக்​கிறேன். அதில் இருந்​து​தான் எங்​களது உத்​வேகம் மாறத்​தொடங்​கியது. கடைசி ஓவர்​களில் ஓவருக்கு 12 அல்​லது 13 ரன்​களைத் துரத்​து​வது கடின​மாக இருக்​கும் என்று எங்​களுக்​குத் தெரி​யும். அதனால், ஹைத​ரா​பாத் அணி​யினரை பாராட்ட வேண்​டும். அவர்​கள் கடைசி ஓவர்களில் மிகச் சிறப்​பாகப் பந்து வீசினர்.

எங்​கள் அணி​யினரின் பந்​து​வீச்சு கடந்த மூன்று போட்டிகளாக மிகச் சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறது என்று நான் நினைக்​கிறேன். இன்​றும் கூட, பவர்​பிளேக்​குப் பிறகு அனைத்து பந்​து​வீச்​சாளர்​களும் அரு​மை​யாக பந்​து​வீசினர். ஆனால், பவர்​பிளே ஓவர்​களில் கூட, ஹைதராபாத் வீரர் அபிஷேக் அற்​புத​மாக பேட்​டிங் செய்தார் என்று நான் உணர்ந்​தேன்.

நாங்​கள் சிறப்​பாக பந்​து​வீசி​ய​போதும் அதை அவர் அரு​மை​யாக எதிர்​கொண்டு அற்​புத​மான பேட்​டிங்கை வெளிப்​படுத்​தி​னார். ஜேமி ஓவர்​டன், குர்​ஜப்​னீத் சிங், நூர் அகமது, அன்​ஷுல் கம்​போஜ் ஆகிய அனை​வரும் தங்​களால் முடிந்த பங்​களிப்​பைச் செய்​தனர். அனை​வரும் சிறப்பாகச் செயல்​பட்​டனர் என்று நான் நினைக்​கிறேன். நெருங்கி வந்து தோல்வி கண்​டோம். கடைசி ஓவர்​களில் வெற்​றிக்கு மிக அரு​கில் வந்​த​போதும் ரன்​களை எட்ட முடிய​வில்​லை. இவ்​வாறு ருது​ராஜ் கெய்க்​வாட்​ தெரிவித்தார்​.

“எங்களது வெற்றியைப் பறித்த அந்த 2 ஓவர்கள்” - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in