

மும்பை: ஹெச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு சார்பில் பிஎஸ்ஏ சாலஞ்சர் தொடர் மும்பையில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் 4-11, 8-11, 5-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் யாசின் ஷோடியிடம் வீழ்ந்தார். மகளிர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் தன்வி கன்னா 11-8, 10-12, 11-4, 11-9 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஃபரிதா வலீதை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.