

செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இனனிங்ஸில் வங்கதேச அணி 91 ரன்களுக்கு சுருண்டது. அதே வேளையில் தென் ஆப்பிரிக்க அணி 494 ரன்கள் குவித்தது. மார்க்கஸ் ஆக்கர்மேன் 150, வியான் முல்டர் 100 ரன்கள் விளாசினர்.
403 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 49.4 ஓவர்களில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தவூஹித் ஹிர்தோய் 41, மஹ்ஃபிசுல் இஸ்லாம் 38, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 34, தன்ஸித் ஹசன் 29 ரன்கள் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 11 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தினார். இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.