திருப்பரங்குன்றம் தீபத்தூண் அரசியலில் சிக்கவைக்கப்பட்ட மதுரை ஆட்சியர்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் அரசியலில் சிக்கவைக்கப்பட்ட மதுரை ஆட்சியர்
Updated on: 
3 min read

மதுரை: கார்த்​திகை தீபத் திருநாளில் திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் அருகே தீபம் ஏற்​றப்​படுவது வழக்​கம். மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணிலும் தீபம் ஏற்ற வேண்​டும் என இந்து அமைப்​பு​கள் கடந்த பல ஆண்​டுகளாக போராடி வரு​கின்​றன. கடந்த ஆண்டு கார்த்​திகை தீபத் திருநாளில் தீபத்​தூணில் தீபம் ஏற்ற உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.

ஆனால், அப்​போது ஆட்​சி​யராக இருந்த பிரவீன்​குமார், உயர் நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாமல் வழக்​கம்​போல் உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் அரு​கில் மட்​டுமே தீபம் ஏற்ற நட​வடிக்கை எடுத்​தார். நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கில் பிரவீன்​குமார் நீதி​மன்​றம் சென்று மன்​னிப்​புக் கேட்​டார்.

இதனிடையே, உயர் நீதி​மன்ற உத்​தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்​கல் செய்த மேல்​முறையீடு மனு உச்ச நீதி​மன்​றத்​தில் அண்​மையில் விசா​ரணைக்கு வந்​த​போது, நடப்​பாண்டு மட்​டும் தீபத்​தூணில் தீபம் ஏற்​றவும், இதற்​கான பணிகளை ஆட்சி​யர் முன்​னின்று மேற்​கொள்ள வேண்​டும் என இடைக்​கால உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்த உத்​தரவை நிறைவேற்​று​வதற்​காக மதுரை மாவட்​டம் முழு​வதும் 144 தடை உத்​தரவை பிறப்​பித்து அனைத்து ஏற்​பாடுகளை​யும் மாவட்ட நிர்​வாகம் செய்து வந்​தது. ஆனால், கடைசி நேரத்​தில் திடீர் திருப்​பமாக ஆட்சி​யர் உத்​தரவை மதிக்​காமல் கோயில் அறங்​காவலர் குழு தனித்​தீர்​மானம் நிறைவேற்றி ஆகம சான்​றுகள், ஆவணங்​கள் மற்​றும் ஸ்தானிகர்​களின் கருத்​துகளின் அடிப்​படை​யில் வழக்​க​மாக தீபம் ஏற்​றப்​படும் இடத்​திலேயே தீபம் ஏற்​றப்​பட்​ட​தாக அறி​விப்பு வெளியானது.

தீபத்​தூணில் தீபம் ஏற்​றாததால் அதிருப்​தி​யடைந்த இந்து அமைப்​பினர், பக்​தர்​கள் திருப்​பரங்​குன்​றம் கோயில் முன் திரண்டு போராட்​டங்​களில் ஈடு​பட்​டனர். அவர்​கள், ஆட்​சி​யரும், தவெக அதி​கார மையங்​களும் இணைந்தே திரைமறைவு நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு தீபத்​தூணில் தீபம் ஏற்​றவில்லை எனக் குற்​றம் சாட்​டினர். போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை குண்​டுக்​கட்​டாக தூக்​கிச் சென்று போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், சமூக வலை​தளங்​களில் தொடரும் மிரட்​டலால் ஆட்சி​யர் மற்​றும் அமைச்​சர் நிர்​மல்​குமார் வீடுகளின் முன் போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. இதனிடையே, தீபத்​தூணில் ஏன் தீபம் ஏற்ற முடி​யாமல் போனது என்​ப​தற்​கான காரணங்​களை விளக்கி 17 பக்க அறிக்​கையை உச்ச நீதி​மன்​றத்​தில் ஆட்சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா தற்​போது தாக்​கல் செய்​துள்​ளார். அதில், தீபத் தூணில் தீபம் ஏற்​று​வதற்​கான அனைத்து நட​வடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​பட்​ட​தாகவும், ஆனால் தீபம் ஏற்ற கோயில் தரப்​பி​லிருந்து ஆட்​கள் வர​வில்லை என விளக்​கம் அளித்​துள்​ளார்.

முன்​கூட்​டியே திட்​டம்: இது​குறித்து மாவட்ட நிர்​வாக உயர் அதி​காரி​கள் சிலர் கூறிய​தாவது: தீபத்​தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விட்​டிருந்த உச்ச நீதி​மன்​றம், அந்த உத்​தரவை நிறைவேற்​றும் பொறுப்பை மதுரை மாவட்ட ஆட்​சி​யரிடம் ஒப்​படைத்​திருந்​தது. நீதி​மன்ற நட​வடிக்​கை​யில் இருந்து தப்​பிப்​ப​தற்​காக ஆட்சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா ஆரம்​பத்​தில் தீபம் ஏற்​று​வதற்​கான ஏற்​பாடுகளை மட்​டுமே செய்து வந்​தார்.

ஆனால், கூட்​டணி கட்​சிகளும், ஆட்​சிக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுக்​கும் கட்​சிகளும் எக்​காரணம் கொண்​டும் தீபம் ஏற்​றக்​கூடாது என முதல்​வர் விஜய்க்கு நெருக்​கடி கொடுத்​துள்​ளனர்.

தவெக அரசின் முக்​கிய அதி​கார மையங்​களாக திகழும் 2 அமைச்​சர்​கள், முதல்​வரிடம் கூட்​டணி கட்​சிகள், ஆதரவு கொடுக்​கும் கட்​சிகள் தீபம் ஏற்​றும் விவகாரத்தை காரணம் காட்டி ஆதரவை வாபஸ் பெற்​றால் ஆட்​சிக்கு நெருக்​கடி ஏற்​படும் என கூறியுள்​ளனர். அத​னால், முதல்​வர் விஜய் கடைசி நேரத்​தில் மனதை மாற்​றிக்​கொண்டு தீபத்​தூணி​ல் தீபம் ஏற்ற வேண்​டாம் என்ற முடிவுக்கு வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அரசின் இந்த மறைமுக உத்​தரவை நிறைவேற்ற, தவெக அமைச்​சர் ஒரு​வரும், ஆட்​சிக்கு வெளியே இருந்து ஆதரவு கொடுக்​கும் கட்​சி​யின் மதுரையை சேர்ந்த முக்​கிய மக்​கள் பிரதி​நிதி ஒரு​வரும் இணைந்து மதுரை மாவட்ட நிர்​வாகத்தை இயக்​கி​யுள்​ளனர்.

இதை கருத்​தில் கொண்​டுதான் முன்​னதாக, தங்​களுக்கு ஆதர​வாக செயல்​படும் கோயில் அறங்​காவலர் குழுவை நியமித்​துள்​ளனர். இவர்​களைக் கொண்டே உச்ச நீதி​மன்ற உத்​தரவுப்​படி தீபத்​தூணில் தீபம் ஏற்​றும் மாவட்ட நிர்​வாகத்​தின் முடிவுக்கு முட்​டுக்​கட்டை போடும் முடிவை முன்​கூட்​டியே திட்​ட​மிட்டு செய்​துள்​ளனர். ஆட்சி​யர், உச்ச நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​று​வதா? ஆளும் கட்சி நெருக்​கடியை சமாளிப்​பதா? எனத் தெரியாமல் இருதலைக் கொள்ளி எறும்​புபோல் தவித்​தார்.

ஆட்​சி​யருக்கு வழிகாட்​டுவதற்​காக மாவட்ட கண்​காணிப்பு அலு​வலராக பணி​யாற்​றும் வீரராக ராவ் அரசு தரப்​பில் மதுரைக்கு அனுப்​பப்​பட்​டார். தீபத்​தூணில் தீபம் ஏற்​றக்​கூடாது என்ற முடிவை முன்​கூட்​டியே எடுத்​து​விட்​ட​தால் அதற்​கான கோயில் விளக்க அறிக்​கையையும் ஏற்​கெனவே தயார் செய்து, வழக்​க​மான இடத்​தில் தீபம் ஏற்​றிய உடனேயே அதை தவெக அமைச்​சர் தரப்​பில் உடனடி​யாக வெளி​யிடப்​பட்​டது.

உச்ச நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாமல் இருப்​ப​தற்​கான அனைத்து ஏற்​பாடுகளை​யும் திட்​ட​மிட்​டபடி கச்​சித​மாக ஆளும் தரப்பு செய்து முடித்​து​விட்​டது. தீபம் ஏற்​றும் பொறுப்பு ஒப்​படைக்​கப்​பட்ட ஆட்சி​யர், நேற்று முன்​தினம் காலை 11 மணி​யளவில் மட்​டும் திருப்​பரங்​குன்​றம் சென்று ஆய்வு செய்​தார். தீபம் ஏற்​றப்​படுவ​தாக கூறப்​பட்ட மாலை நேரத்​தில் ஆட்சி​யர் திருப்​பரங்​குன்​றம் செல்​வதை தவிர்த்து தன்​னுடைய முகாம் அலு​வல​கத்​திலேயே இருந்​து ​விட்​டார்.

தற்​போது ஆட்சி​யர் உச்ச நீதி​மன்​றத்​துக்கு விளக்க அறிக்​கையை அனுப்​பி​விட்டு தனது பங்​களாவில் இருந்​த​படி உச்ச நீதி​மன்​றத்​தின் அடுத்​தகட்ட நட​வடிக்​கைகளை எப்​படி எதிர்​கொள்​வது என ஆளும்​கட்​சித் தரப்​புடன் ஆலோ​சனை செய்து வரு​கிறார். உச்ச நீதி​மன்​றத்​தில் ஆஜராக டெல்​லிக்கு அழைக்​கப்​பட்​டாலும், அங்கு சென்று இந்த வழக்கை எப்​படி எதிர்​கொள்​வது என்று அவர் ஆலோ​சனை நடத்தி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

மதுரை ஆட்சியர் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் பிரதான மனுதாரர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் நேற்று ஆஜரானார்.

அப்போது, திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மதுரை ஆட்சியரும் அதிகாரிகளும் மீறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டது.

எனவே, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார். இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் அரசியலில் சிக்கவைக்கப்பட்ட மதுரை ஆட்சியர்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் அர்லேகர்

X