‘தி ஹண்ட்ரட்’ தொடரில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் நட்​சத்​திர வீராங்​க​னை​யான ஜெமிமா ரோட்​ரிக்ஸ் இங்​கிலாந்​தில் நடை​பெற்று வரும் ‘தி ஹண்ட்​ரட்’ கிரிக்​கெட் தொடரில் சதர்ன் பிரேவ் அணிக்​காக விளை​யாடி வந்​தார்.

இந்​நிலை​யில் தொடை பகு​தி​யில் ஏற்​பட்ட காயம் காரண​மாக ‘தி ஹண்ட்​ரட்’ தொடரில் இருந்து ஜெமிமா ரோட்​ரிக்ஸ் விலகி உள்​ளார். ‘தி ஹண்ட்​ரட்’ தொடரில் 25 வயதாகும் ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 143 ரன்​கள் சேர்த்​திருந்​தார்.

காயம் அடைந்​துள்ள ஜெமிமா ரோட்​ரிக்ஸ் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள மகளிருக்​கான ஆசிய கோப்பை டி 20 தொடரில் பங்​கேற்​பது சந்​தேகம் என கூறப்​படு​கிறது. இந்​தத் தொடரில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 30-ம் தேதி தாய்​லாந்​துடன் மோதுகிறது.

<div class="paragraphs"><p>ஜெமிமா ரோட்ரிக்ஸ்</p></div>
உத்தராகண்ட் பெண்ணுக்கு 8 அடி 10 அங்குல நீள கூந்தல்: கின்னஸ் உலக சாதனை படைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in