ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: சென்னை - கோவா அணிகள் பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: சென்னை - கோவா அணிகள் பலப்பரீட்சை
Updated on: 
1 min read

கோவா: ஐஎஸ்​எல் கால்​பந்து தொடரின் 13-வது சீசன் இன்று தொடங்​கு​கிறது. 13 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடர் வழக்​க​மான முறை​யில் உள்​ளூர் மைதானம், வெளி​மாநில மைதானம் என போட்​டிகள் நடை​பெற உள்​ளன. லீக் சுற்​றின் முடி​வில் முதல் இடத்தை பிடிக்​கும் அணிக்கு ஷீல்டு வழங்​கப்​படும்.

அதேவேளை​யில் லீக் சுற்​றின் முடி​வில் முதல் 6 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் பிளே ஆஃப் சுற்​றில் பலப்​பரீட்சை நடத்​தும். இம்​முறை பிர​தான ஸ்பான்​ச​ராக எம்ஜி மோட்​டார் நிறு​வனம் இணைந்​துள்​ளது. மேலும் முதன்​முறை​யாக யூடியூபில் போட்​டிகள் இலவச​மாக ஒளிபரப்பு செய்​யப்பட உள்​ளது.

தொடக்க நாளான இன்று மாலை 5 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள கண்​டீரவா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பெங்​களூரு எஃப்சி - எஸ்சி டெல்லி அணி​கள் மோதுகின்​றன. இரவு 7 மணிக்கு கோவா​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் சென்​னை​யின் எஃப்சி - எஃப்சி கோவா அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

பெங்​களூரு அணி உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். ஸ்பெ​யின் நாட்​டைச் சேர்ந்த முன்கள வீரர் போர்ஜா மார்​டினெஸ், போர்ச்​சுகல் தற்​காப்பு வீரர் சாண்ட்ரோ எம்​பாலோ, அர்​ஜெண்​டினா நடுகள வீரர் மானுவல் டி இரியோண்​டோ, நெதர்​லாந்து மத்​திய தற்​காப்பு வீரர் மெனோ கோச், மாண்​டினீக்ரோ முன்கள வீரர் மிஹைலோ பெரோ​விச் ஆகியோர் பெங்​களூரு எஃப்​.சி அணி​யில் இணைந்​துள்​ளனர்.

இவர்​களு​டன் இளம் இந்​திய வீரர்​களான சோஹம் வர்​ஷ்னே​யா, வினித் வெங்​கடேஷ், ஹர்ஷ் பலாண்டே ஆகியோ​ரும் இணைந்து விளை​யாட உள்​ளது அணிக்கு கூடு​தல் பலம் சேர்க்​கக்​கூடும்.

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: சென்னை - கோவா அணிகள் பலப்பரீட்சை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 6 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in