தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 6 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 6 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்
Updated on: 
1 min read

டர்பன்: தென் ஆப்​பிரிக்கா - ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி டர்​பனில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்​திரேலிய அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. அதிரடி வீர​ரான டிரா​விஸ் ஹெட் 19 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 9 ரன்​கள் எடுத்த நிலை​யில் வியான் முல்​டர் பந்​தில் விக்​கெட் கீப்​பர் கைல் வெரெய்​னிடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார்.

10 வருடங்​களுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருந்த மற்​றொரு தொடக்க வீர​ரான நிக் மேடிசன் 33 பந்​துகளை சந்​தித்து ரன் ஏதும் எடுக்​காமல் மார்கோ யான்​சன் பந்​தில் போல்​டா​னார். 24 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் களமிறங்​கிய ஸ்டீவ் ஸ்மித், மார்​னஸ் லபுஷேனுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைக்க முயன்​றார். மார்​னஸ் லபுஷேன் 37 ரன்​கள் எடுத்த நிலை​யில் வியான் முல்​டர் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்​களில் மார்கோ யான்​சன் பந்​தில் கல்லி திசை​யில் வியான் முல்​டரிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். 3-வது விக்​கெட்​டுக்கு லபுஷேன், ஸ்மித் ஜோடி 60 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய அலெக்ஸ் கேரி 14, பியூ வெப்​ஸ்​டர் 4 ரன்​களில் அன்​ரிச் நோர்க்​கியா பந்​தில் நடையை கட்​டினர்.

ஆஸ்​திரேலிய அணி 65.2 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்​கள் எடுத்​திருந்த போது போதிய வெளிச்​சம் இல்​லாத காரணத்​தால் ஆட்​டம் நிறுத்​தப்​பட்​டது. அப்​போது மேட் ரென்ஷா 46, கேப்​டன் பாட் கம்​மின்​ஸ் 33 ரன்​களு​டன்​ களத்​தில்​ இருந்​தனர்​.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 6 விக்கெட்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: சாப்மேன், ஜாக் ஃபோல்க்ஸ் விலகல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in