இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் பாபர் அசாம் பங்கேற்பது சந்தேகம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் பாபர் அசாம் பங்கேற்பது சந்தேகம்
Updated on
1 min read

லண்டன்: இங்கிலாந்துக்கு எதி​ராக லண்​டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (27-ம் தேதி) தொடங்​க​வுள்ள 2-வது டெஸ்ட் போட்டியில், பாபர் அசாம் களமிறங்​கு​வது சந்​தேகம் என தகவல்கள் வெளி​யாகி உள்​ளன.

மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் போது பாபர் அசாமின் விரலில் காயம் ஏற்​பட்​டது. தொடர்ந்து இங்கிலாந்து சுற்​றுப்​பயணத்​தின் போது, கென்ட் நகரில் நடை​பெற்ற பயிற்சி ஆட்​டத்​தில் அதே விரலில் மீண்​டும் பந்து தாக்​கிய​தால் பாபர் அசாமின் காயம் தீவிரமடைந்​தது.

இதன் காரண​மாக கடந்த வாரம் லீட்ஸ் நகரில் நடை​பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் பாபர் அசாம் விளை​யாட​வில்​லை. அப்​போட்​டி​யில் சல்​மான் அலி ஆகா தலை​மை​யில் களமிறங்​கிய பாகிஸ்தான் அணி இன்​னிங்ஸ் மற்றும் 103 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்த ஆட்டம் 3 நாட்​களுக்​குள் முடிவடைந்து இருந்​தது.

விரலில் ஏற்​பட்​டுள்ள வீக்​கம் காரண​மாக பாபர் அசா​மால் பேட்டை சரி​யாகப் பிடிக்க முடிய​வில்​லை. இன்று நடை​பெறும் வலைப்​ப​யிற்​சி​யில் பாபர் அசாம் பேட்​டிங் செய்​வதைப் பொறுத்தே அவர், 2-வது டெஸ்​டில் விளை​யாடு​வா​ரா? என்​பது தெரிய​வரு​ம்​.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் பாபர் அசாம் பங்கேற்பது சந்தேகம்
கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in